Published : 23 Jul 2014 09:20 AM
Last Updated : 23 Jul 2014 09:20 AM
நம்மிடம் கார் இல்லையென்றாலும், காரில் போக வேண்டுமென்று ஆசை எல்லோருக்கும் இருக்கும் இல்லையா? காரில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். காரின் கதவைத் திறந்து, மூடிப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைப்போம் இல்லையா? காரைப் பற்றித் தெரிந்துகொள்ள நம்மிடம் கார் இருக்க வேண்டுமென்ற தேவையில்லை. சர்ரென்று ஒரு ரவுண்டு போய் வருவோம்...
# ஆரம்ப காலக் கார்களில் ஸ்டியரிங் வீல் இல்லை. காரை ஓட்ட ஓட்டுநர்கள் நெம்புகோலையே பயன்படுத்தினர்.
# உலகில் தற்போது ஓடும் கார்களின் எண்ணிக்கை 100 கோடி. 1986-ல் 50 கோடிக் கார்களே ஓடிக்கொண்டிருந்தன.
# உலகில் ஒவ்வொரு நாளும் புதிதாக 1,65,000 கார்கள் உற்பத்தியாகின்றன.
# புது காரில் வரும் வாசம் உங்களுக்குப் பிடிக்கும் அல்லவா? அதற்காக 50 நறுமணப் பொருள்கள் கலக்கப்படுகின்றன.
# சராசரியாக ஒரு காரில் 30,000 உதிரி பாகங்கள் இருக்கின்றன. இதில் சின்னஞ்சிறிய பாகங்களும் அடக்கம்.
# பிரிட்டிஷ் போக்குவரத்து போலீஸார் எப்போதும் கைகளில் பொம்மைக் கரடிகளை வைத்திருப்பார்கள். சாலை விபத்துகளில் சிக்கும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்ட அவர்கள் இதை வைத்திருக்கிறார்கள்.
# ஹெச்.பி. எனப்படும் ஹார்ஸ் பவர் என்ற அளவுக்கும், குதிரை ஓடும் அளவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஓர் இயந்திரம் ஓடும் அளவைக் குறிப்பதற்காக உருவாக்கப்பட்ட சொல் அது, அவ்வளவுதான்.
# மும்பையைச் சேர்ந்த கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஃபாஸ்டர், 1897-ல் இந்தியாவில் முதன் முதலில் கார் வாங்கினார்.
# 1769-ல் உலகின் முதல் மோட்டார் வாகன விபத்து நடந்தது. அந்தக் கார் இப்போதும் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள தேசிய கலை, கைவினை காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
# முதன் முதலில் கார் வாங்கிய இந்தியர் ஜம்ஷெட்ஜி டாட்டா, 1901-ம் ஆண்டில் அவர் அதை வாங்கினார்.
# உலகின் முதல் எலெக்ட்ரானிக் போக்குவரத்து சிக்னல், இங்கிலாந்தில் உள்ள வோல்வர்ஹாம்ப்டனில் 1927-ல் நிறுவப்பட்டது.
# 1965-ம் ஆண்டில், ஒரே ஆண்டில் 10 லட்சம் கார்கள் விற்றது செவ்ரோலே இம்பாலா. இந்தச் சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
# ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்த கார்களில் 75 சதவீதம் இன்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
# சாலை நெருக்கடிகள் காரணமாக இந்தியாவில் ஓர் ஆண்டில் ரூ. 54 கோடி மதிப்புள்ள எரிபொருள் வீணாகிறது.
# ஒரு காரில் 95 கி.மீ. வேகத்தில் பயணித்தால் நிலவை அடைய 6 மாதங்கள் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT