Last Updated : 27 Apr, 2016 12:43 PM

 

Published : 27 Apr 2016 12:43 PM
Last Updated : 27 Apr 2016 12:43 PM

மேஜிக்.. மேஜிக்...- மேஜைக்குள் நுழையும் மந்திரக் காசு

ஹலோ குழந்தைகளே, இந்த வாரம் காசை வைத்து இன்னொரு வித்தையைச் செய்து பார்ப்போமா?

என்னென்ன தேவை:

காசு, மேஜை.

மேஜிக் செய்வது எப்படி:

l முதலில், உங்கள் நண்பர்களிடம் காசைக் கொடுத்துச் சோதித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.

l பின், அந்தக் காசை வாங்கி, கையில் பிடித்து வேகமாக மேஜை மீது தட்டுங்கள்.

l நாணயம் மேஜை மீது இருந்து, அப்படியே அதனுள் சென்று, கீழே விழுந்துவிடும்.

l அதையே இன்னொரு முறை செய்துகாட்டுங்கள். இது தான் மேஜிக்.

மேஜிக் ரகசியம்:

l முதலில் உங்கள் நண்பர்கள் மேஜை மீது ஏதோ ஓட்டைதான் இருக்கிறது என நினைத்து, அதை நன்றாகச் சோதித்து ஏமாந்து போவார்கள்.

l ஆனால், உண்மையில் மேஜை மீது எந்த ஓட்டையும் இல்லை. நீங்கள் மேஜையின் ஒரு பக்கம் உட்கார்ந்துகொண்டு, யாருக்கும் தெரியாமல், நண்பர்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே, காசை மேஜை மீது தட்டுவதற்கு முன், அதை உங்கள் பக்கம் கொண்டு வந்து, மற்றொரு கையில் விழ வைத்துப் பிடித்துக்கொள்ளவேண்டும்.

l இப்போது மேலே இருக்கும் கையில் காசு எதுவும் இல்லை. ஆனால் நாணயத்தைப் பிடித்திருப்பதுபோல நீங்கள் பாவனை செய்ய வேண்டும்.

l பிறகு, உங்கள் கையை மேஜை மீது தட்டும் அதே நேரத்தில் கீழே கையில் பிடித்திருக்கும் காசை தரையில் விழ வைக்க வேண்டும்.

l இது பார்க்க, நாணயம் மேஜையை துளைத்துக்கொண்டு, தரையில் விழுந்ததை போலத் தெரியும். இதுதான் மேஜிக் ரகசியம்.

ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x