Last Updated : 13 Apr, 2016 11:28 AM

 

Published : 13 Apr 2016 11:28 AM
Last Updated : 13 Apr 2016 11:28 AM

மேஜிக்... மேஜிக்... - இடம் மாறும் மந்திர நாணயம்

வணக்கம் குழந்தைகளே. இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பிடித்த நாணய மேஜிக்கை செய்யப்போகிறோம். எளிதாக எப்படிச் செய்வது என பார்ப்போமா?

என்னென்ன தேவை

நான்கு நாணயங்கள்

மேஜிக் செய்வது எப்படி?

# நான்கு நாணயங்களையும் ஒரு மேஜையின் மீது வைத்து, அதிலிருந்து இரண்டு நாணயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு கைகளுக்குள் வைத்து, கைகளை மூடிக் கொள்ளுங்கள்.

# மேஜையின் மீது இருக்கும் மற்ற இரண்டு நாணயங்களை எடுத்து, மூடியிருக்கும் கைகளின் விரல்களின் மீது படத்தில் காட்டியதைப் போல வைத்துக்கொள்ளுங்கள்.

# இப்போது கைகளைத் திருப்பினால், விரல் மேல் இருக்கும் இரண்டு நாணயங்களும் கீழே விழுந்துவிடும்.

# இப்போது பக்கத் தில் இருக்கும் உங்கள் நண்பர் யாரையாவது கூப்பிட்டு, நாணயங்களை மீண்டும் மூடியிருக்கும் கைகளின் மீது வைக்கச் சொல்லுங்கள்.

# அடுத்து, விரல்களின் மேல் இருக்கும் நாணயங்களை, கைகளின் உள்ளே விழவையுங்கள்.

# இப்போது, மந்திரம் சொல்லிக் கைகளைத் திறந்தால், ஒரு கையில் ஒரே ஒரு நாணயமும், இன்னொரு கையில் மூன்று நாணயங்களூம் இருக்கும்.

மேஜிக் ரகசியம்:

# நீங்கள் கைகளுக்குள் இரண்டு நாணயங்களும், கைகளுக்கு வெளியில் விரல்களின் மேல் இரண்டு நாணயங்களும் வைத்து, கைகளைத் திருப்பினீர்கள் இல்லையா?

# நீங்கள் கைகளுக்குள் இரண்டு நாணயங்களும், கைகளுக்கு வெளியில் விரல்களின் மேல் இரண்டு நாணயங்களும் வைத்து, கைகளைத் திருப்பினீர்கள் இல்லையா?

# அப்போது, ஒரு கைக்கு மேல் இருக்கும் நாணயத்தை, கைகளுக்கு உள்ளே மறைத்துக்கொண்டு, மறு கையில் இருக்கும் இரண்டு நாணயங்களைக் கீழே விழ வைக்க வேண்டும்.

# இப்போது உங்களது ஒரு கை காலியாகவும், மறு கையில் இரண்டு நாணயங்களும் இருக்கும். உங்கள் கைகள் எப்போதும் மூடிய நிலையில்தான் இருக்க வேண்டும்.

# அடுத்து, உங்கள் நண்பரை அழைத்துக் கீழே இருக்கும் நாணயங்களைக் கைகளின் மீது வைக்கச் சொல்லும்போது, ஒரு கையில் விரல்களுக்கு மேல் ஒரு நாணயமும், மற்றொரு கையில் விரல்களுக்கு மேல் ஒரு நாணயமும், விரல்களுக்குள் கையில் இரண்டு நாணயங்களும் இருக்கும்.

# அடுத்ததாகக் கைகளின் மேல் இருக்கும் நாணயங்களைக் கைகளுக்குள் விழவைத்து கைகளைத் திறக்கும்போது, ஒரு கையில் ஒரு நாணயமும், மற்றொரு கையில் மூன்று நாணயங்களும் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x