Published : 16 Mar 2016 12:12 PM
Last Updated : 16 Mar 2016 12:12 PM

நீங்களே செய்யலாம்: சுவர் அலங்காரம்!

குழந்தைகளே போன வாரம், காகிதக் கோப்பையில் அலங்காரப் பொருளைச் செய்து பார்த்தீர்களா? இந்த வாரமும் காகிதத்தில் எளிமையான ஒரு சுவர் அலங்காரப் பொருளைச் செய்வோமா?

தேவையான பொருட்கள்

# கத்தரிக்கோல்

# பசை

# வண்ணக் காகிதங்கள்

# நூல்

செய்முறை

# வண்ணக் காகிதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றைப் படத்தில் காட்டியதுபோல இதய வடிவில் வெட்டிக்கொள்ளுங்கள் ( உங்களுக்கு விருப்பமான வடிவங்களில் காகிதத்தை வெட்டிக்கொள்ளலாம்).

# வெட்டப்பட்ட இதய வடிவிலான காகிதத்தில் பசையைக் கொண்டு நூலுடன் ஒட்டிக்கொள்ளுங்கள்.

# ஒன்றன் பின் ஒன்றாக நூலில் இந்த வடிவத்தை ஒட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது அழகான ஒரு அலங்காரப் பொருள் தயார்.

இதைச் சுவரில் ஒட்டலாம் அல்லது வீட்டின் உத்தரத்தில் தொங்க விட்டு வீட்டை அலங்கரிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x