Published : 30 Mar 2016 11:38 AM
Last Updated : 30 Mar 2016 11:38 AM

நீங்களே செய்யலாம்: மொபைல் ஸ்டேண்டு செய்வோமா?

வீட்டில் மொபைல் போனை ஸ்டேண்டில் வைத்திருப்பார்கள் அல்லவா? அந்த ஸ்டேண்டை வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா?



தேவையான பொருட்கள்:

கத்தரிக்கோல், பிளாஸ்டிக் பாட்டில், மார்க்கர்.



செய்முறை:

# படத்தில் காட்டியபடி பாட்டிலில் வரைந்துகொள்ளுங்கள். இப்போது வரைந்த பகுதியை வெட்டிக்கொள்ளுங்கள்.

# படத்தில் காட்டியதுபோல ஒரு துளையைப் போட்டுக்கொள்ளுங்கள்.

# இப்போது ஒரு ஸ்டேண்டு கிடைத்துவிட்டதா? ஆனால், பார்ப்பதற்கு அழகாக இல்லை அல்லவா?

# ஸ்டேண்டை அழகுபடுத்த வண்ணக் காகிதத்தைச் சுற்றி ஓட்டுங்கள்.

இந்த ஸ்டேண்டில் மொபைல் போன் மட்டுமல்ல, உங்களுடைய பேனா, பென்சில் ஆகியவற்றையும்கூட வைத்துக்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x