Published : 23 Mar 2016 12:09 PM
Last Updated : 23 Mar 2016 12:09 PM

நீங்களே செய்யலாம்: வண்ணக் காகிதப் பூ

பிளாஸ்டிக்கில் அழகழகான பூக்களைப் பார்த்திருப்பீர்கள். காகிதத்தில்கூட விதவிதமான பூக்களைச் செய்யலாம். அப்படி ஒரு பூவைச் செய்து பார்ப்போமா?

தேவையான பொருள்

வண்ணக் காகிதம், கத்தரிக்கோல், பசை, உறிஞ்சு குழல் (ஸ்டிரா).

செய்முறை

# வண்ணக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை 12 x 4 என்ற அளவில் வெட்டிக்கொள்ளுங்கள்.

# படத்தில் காட்டியது போலக் காகிதத்தை வெட்டிக்கொள்ளுங்கள்.

# காகிதத்தை உருளை போலச் சுருட்டி ஒட்டிக்கொள்ளுங்கள்.

# இப்போது காகிதம் மொட்டு போலத் தெரியும். மொட்டில் கையைப் பரப்பி அழுத்தினால், பூவின் இதழ்கள் போல வந்துவிடும்.

# பூவை இன்னும் அழகாக்க ஒரு சிறிய மணியை மலரின் உள்ளே நுழையுங்கள்.

# பூவுக்குத் தண்டு வேண்டுமில்லையா? அதற்கு ஸ்டிராவை வெட்டி, பூவின் பின்புறத்தில் ஒட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது அழகான காகிதப் பூ தயார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x