Published : 17 Feb 2016 11:52 AM
Last Updated : 17 Feb 2016 11:52 AM
± முகப்பவுடர்களில் பயன்படுத்தப்படும் டால்க் தான் இதுவரை கண்டறியப்பட்ட வேதிப்பொருட்களில் மிகவும் மிருதுவானது.
± காலியம் என்ற உலோகம் மிகக் குறைந்த உருகும் நிலையைக் கொண்டிருப்பதால் கைகளில் வைத்தாலே (29.76 °செல்சியஸ்) உருகிவிடும். ஏனென்றால், நமது உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
± மிக அதிக உருகுநிலை கொண்ட தனிமம் டங்க்ஸ்டன் -3,410 டிகிரி செல்சியஸ். அதனால்தான் பல்பு இழை அதில் செய்யப்பட்டது.
± கலிஃபோர்னியம் என்ற தனிமம்தான் உலகிலேயே மிக அதிக விலை கொண்டது. அதன் ஒரு கிராம் விலை ரூ. 35,000 கோடி.
± பூமியின் மேல்அடுக்கில் மிக அதிகமுள்ள தனிமம் ஆக்சிஜன். இது தண்ணீரிலும் வளிமண்டலத்திலுமாக மொத்தம் 49.5 சதவீதம் உள்ளது.
± பூமியின் மேல் ஓட்டில் மிக அதிக அளவில் இருப்பது அலுமினியம் (கிட்டத்தட்ட 8 சதவீதம்).
± நமது உடலிலுள்ள கார்பனைக் கொண்டு 9,000 பென்சில்களைச் செய்துவிடலாம்.
± தனிம வரிசை அட்டவணையில் முதலிடத்தில் உள்ள தனிமம் ஹைட்ரஜன். அதில் ஒரேயொரு அணு மட்டுமே இருப்பதால், அது முதலிடத்தைப் பிடித்தது.
± தனிம வரிசை அட்டவணையில் இல்லாத ஒரேயொரு ஆங்கில எழுத்து ஜே.
± கிராஃபைட், வைரம், நிலக்கரி எனப் பல்வேறு வடிவங்கள் கொண்டது கார்பன்.
± ஒரு வளர்ந்த சராசரி மனிதரின் உடலில் 250 கிராம் உப்பு இருக்கிறது.
± பிரபஞ்சத்தில் மிகவும் அதிகமாக உள்ள தனிமம் ஹைட்ரஜன், அதாவது 75 சதவீதம்.
± தனிமங்களிலேயே ஹீலியம் மட்டும்தான் எந்த வெப்பநிலையிலும் திடமாக மாறுவதில்லை. வாயுவாகவே இருக்கிறது.
± அறை வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும் ஒரே தனிமம் பாதரசம்.
± அஸ்டாடைன் என்ற தனிமம்தான் பூமியில் மிகவும் அரிதானது. பூமியின் ஒட்டுமொத்த மேற்பரப்பில் இது வெறும் 28 கிராம் மட்டுமே இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT