Last Updated : 18 Nov, 2015 12:11 PM

 

Published : 18 Nov 2015 12:11 PM
Last Updated : 18 Nov 2015 12:11 PM

மேஜிக்... மேஜிக்...இடம் மாறும் மந்திர பென்சில்

குழந்தைகளே, ஒவ்வொரு வாரமும் குட்டி மேஜிக்குகளைப் பார்த்து வருகிறோம் அல்லவா? இந்த வாரம் அதிசயப் பென்சில் மேஜிக் செய்து பார்த்துப் பழகுவோமா?

என்னென்ன தேவை?

சுண்டு விரல் அளவுக்கு இரண்டு பென்சில்கள்

மேஜிக்:

# இரண்டு குட்டிப் பென்சில்களை மேஜையின் மீது வையுங்கள்.

# வலது பக்க பென்சில் மீது வலது கையையும், இடது பக்க பென்சில் மீது இடது கையையும் வையுங்கள். பின்னர் கைகளைத் திருப்பிப் பென்சில்கள் மீது வையுங்கள்.

# இப்போது, வலது பக்க பென்சிலை இடது கையில் எடுத்து விரல்களுக்குள் மூடிக்கொள்ளுங்கள். இடது பக்கம் இருக்கும் பென்சிலை வலது கையில் எடுத்து மூடிவைத்துக் கொள்ளுங்கள்.

# இப்போது மேஜிக் மந்திரத்தைச் சொல்லி இரண்டு கைகளையும் திறந்தால், இடது கையில் இருந்த பென்சில் வலது கைக்கு மாறியிருக்கும். இரண்டு பென்சில்களும் ஒரே கையில் இருக்கும்.

மேஜிக் ரகசியம்

# நீங்கள் பென்சில்களை வெவ்வேறு கைகளுக்கு மாற்றினீர்கள் அல்லவா? அப்போது பென்சிலை வலது கையால் எடுத்து இடது கையில் வைப்பது போலப் பாவனை மட்டுமே செய்ய வேண்டும்.

# இடது கையில் பென்சிலை வைப்பதுபோலப் பாவனை மட்டுமே செய்து, வலது கையிலேயே வைத்துக்கொண்டு, உடனே கையை மூடிக்கொள்ள வேண்டும்.

# பின்னர் வலது கையால் மற்றொரு பென்சிலை எடுத்துக் கையை மூடி, மேஜிக் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

# கைகளைத் திறக்கும்போது, வலது கையில் இரண்டு பென்சில்களும் இருக்கும். இடது கை காலியாக இருக்கும். இதுவே மேஜிக் பென்சிலின் ரகசியம்.

இந்த மேஜிக்கை பலமுறை செய்து பார்த்துப் பயிற்சி எடுத்தால், எளிதாகச் செய்துவிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x