Published : 07 Oct 2015 11:57 AM
Last Updated : 07 Oct 2015 11:57 AM
குழந்தைகளே...
மேஜிக் வித்தைகளை உங்கள் நண்பர்களுக்கு செய்துகாட்டி, அவர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டீர்களா? இதோ இந்த வாரமும் மேஜிக்கை செய்துகாட்டி அசத்துங்களேன்.
என்னென்ன தேவை?
தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் பாட்டில், குட்டி ஜாம் பாக்கெட்.
மேஜிக்
1. மேஜை மீது தண்ணீர் நிரம்பிய பாட்டில் ஒன்றை வையுங்கள்.
2. ஜாம் பாக்கெட்டை பாட்டிலுக்குள் நுழைத்து மூடியை இறுக்கமாக மூடுங்கள்.
3. ஒரு கையை பாட்டிலின் பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால், ஜாம் பாக்கெட்டைக் கீழே செல்லுமாறு சைகை காட்டி கட்டளை இடுங்கள். கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஜாம் பாக்கெட் கீழே செல்லும். மேலே செல்லுமாறு கட்டளை இட்டதும் மேலே செல்லும். நடுவில் நிற்குமாறு உத்தரவிட்டால் அப்படியே செய்யும். இந்த மேஜிக்கை செய்துகாட்டி உங்கள் நண்பர்களை ஆச்சரியத்தில் அசத்துங்கள்.
மேஜிக் எப்படி சாத்தியம்?
4. பாட்டிலுக்குள் முழுமையாகத் தண்ணீர் இருப்பதால், ஜாம் பாக்கெட்டை அதில் நுழைத்தவுடன் அப்படியே நிற்கும்.
5. பாட்டிலின் பக்கவாட்டை இன்னொரு கையால் பிடிக்க வேண்டும் என்று சொன்னோமில்லையா? அப்படிப் பிடிக்கும்போது மேல் புறத்தை லேசாக அழுத்த வேண்டும். அப்படி அழுத்தும்போது ஜாம் பாக்கெட் கீழ் நோக்கிச் செல்லும்.
6. அழுத்தத்தைக் கொஞ்சம் விடும்போது மேல் நோக்கி வரும். எதிரே இருப்பவர்களுக்கு பாட்டிலின் பக்கவாட்டில் அழுத்தம் கொடுப்பது தெரியாது.
எனவே உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஜாம் பாக்கெட் மேலும் கீழும் நகருவதாகவே நண்பர்கள் நினைப்பார்கள்.
ஓவியம்: வெங்கி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT