Last Updated : 23 Sep, 2015 12:50 PM

 

Published : 23 Sep 2015 12:50 PM
Last Updated : 23 Sep 2015 12:50 PM

தமிழ் சிறுமிக்கு அமெரிக்க விருது

பாண்டு: ஹாய் வாண்டு, பார்த்து ஒரு வாரம் ஆயிடுச்சு. எப்படி இருக்க?

வாண்டு: ம்... ரொம்ப சூப்பரா இருக்கேன் பாண்டு. விநாயகர் சதுர்த்தி நல்லா கொண்டாடினியா? நிறைய கொழுக்கட்டை தின்னுருப்பியே...

பாண்டு: எனக்குதான் கொழுக்கட்டைன்னா ரொம்ப உசுராச்சே. விடுவேனா? நீ மட்டும் என்ன, நல்லா வெளுத்து வாங்கியிருப்பியே?

வாண்டு: ரொம்பெல்லாம் சாப்பிடல. விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு ஊர்ல இருந்து எங்க அங்கிள் வந்திருந்தாரு. பை நிறைய பழம் வாங்கி வந்திருந்தாரு. அதுல நிறைய சாப்பிட்டேன்டா.

பாண்டு: கிரிக்கெட் பந்து மாதிரி இருக்குமே, அந்தப் பழம்தானே?

வாண்டு: ஆமா, அதேதான். இந்தப் பழத்தை நான் சாப்பிட்டேதே இல்லை. சாப்பிட்டு பார்த்தேன். புளிப்பு, இனிப்பும் கலந்து ரொம்ப டேஸ்டா இருந்துச்சு. அந்தப் பழத்தை பத்தி அங்கிள் நிறைய சொன்னாரு.

பாண்டு: என்ன சொன்னாரு உங்க அங்கிள்?

வாண்டு: விளாம் பழத்தை ‘வுட் ஆப்பிள்’ன்னு இங்கிலீஷ்ல சொல்வாங்களாம். புளியங்காய் பழுத்து ஒரு ஓட்டுக்குள் பழமா இருக்குற மாதிரிதான், இந்தப் பழமும். காயா இருக்குறப்ப ரொம்ப கெட்டியா இருக்கும். பழமா மாறிட்ட புளியம்பழம் மாதிரியே ஓடுல ஒட்டாம தனியா இருக்கும். அதுல கொஞ்சம் வெல்லத்தை கலந்து சாப்பிட்டால் அவ்ளோ ருசி. இந்தப் பழத்துல நிறைய இரும்புச் சத்து இருக்காம். அப்புறம் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ-ன்னு சத்துக்கள்லாம் இருக்காம். தினமும் சாப்பிட்டா உடலுக்கு ரொம்ப நல்லதுன்னு சொன்னாரு.

பாண்டு: அப்படியா; நீ சொல்றப்ப எனக்கு நாக்குல எச்சி ஊருது வாண்டு. இனி நானும் இந்தப் பழத்தை வாங்கி தரச் சொல்லி அம்மாகிட்டே கேட்குறேன்.

வாண்டு: அப்புறம், குவார்ட்டர்லி எக்ஸாம் தொடங்கிருச்சா பாண்டு.

பாண்டு: ஆமா, தொடங்கிருச்சி. படிபடின்னு வீட்டுல அம்மா கொட்டிக்கிட்டே இருக்காங்க.

வாண்டு: மார்க் வாங்கணும்னா, படிச்சுதானே ஆகணும்.

பாண்டு: நீ சொல்றது கரெக்ட்தான். என்னதான் விழுந்துவிழுந்து படிச்சாலும் மறந்துபோயிடுது வாண்டு. எக்ஸாம் ஹால்ல ஞாபகமே வர மாட்டேங்குது.

வாண்டு: உண்மையில ஒரு விஷயம் சொல்லட்டுமா பாண்டு.

பாண்டு: என்ன விஷயம்?

வாண்டு: நீ எப்பவுமே எக்ஸாம் டைம்ல புத்தகத்தை மனப்பாடம் செஞ்சின்னா, இப்படித்தான் மறக்கும். அதுக்கு எங்க டீச்சர் ஒரு வழி சொன்னாங்க.

பாண்டு: என்ன சொன்னாங்க, அதை முதல்ல சொல்லு?

வாண்டு: சொல்றேன் பாண்டு. எக்ஸாம் டைம்ல புத்தகத்தை மனப்பாடம் செய்றதுக்குப் பதிலா, தொடக்கத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாய் பாடங்கள படிக்கணுமாம். கடைசி கட்டத்துல புதுசா படிக்குறப்ப, அதுவும் நிறைய படிக்கிறப்ப மனசுக்குள்ள ரொம்ப பயத்தை ஏற்படுத்திடுமாம். அந்த நேரத்துக்கு நமக்கு மனப்பாடம் ஆன மாதிரி தெரிஞ்சாலும், நம்ம மனசுக்குள்ள இருக்குற பயம் எல்லாத்தையும் மறக்க வைச்சிருமாம்.

அதனாலே அன்னனைக்கு பாடத்தைப் படிக்கிறது, ரொம்ப நல்லதுன்னு சொன்னாங்க. அப்படி படிக்கிறப்ப அதைப் புரிஞ்சி படிச்சா, எப்பவும் மறக்காதுன்னும் சொன்னாங்க. நான் அதைதான் ஃபாலோ பண்றேன். அதனாலதான் எக்ஸாம் டைம்ல டென்ஷன் இல்லாம, ஃப்ரீயா இருக்கேன்.

பாண்டு: சரி வாண்டு, இனிமே நானும் அப்படியே செஞ்சு பார்க்குறேன். அப்புறம் நியூஸ் பேப்பர் பாத்தியா, அமெரிக்க வெள்ளை மாளிகையில தமிழ்நாட்டு குட்டிப் பொண்ணுக்கு விருது கொடுத்திருக்காங்க.

வாண்டு: அப்படியா, நான் பார்க்கலையே. அதைப்பத்தி நீயே சொல்லேன்.

பாண்டு: சொல்றேன். அந்தக் குட்டிப் பொண்ணு பேரு ஸ்வேதா பிரபாகரன். 15 வயசுதான் ஆகுது. திருநெல்வேலிதான் சொந்த ஊராம். அமெரிக்காவுல வர்ஜினியா மாகாணத்துல இருக்காங்க. அமெரிக்க அதிபரோட வெள்ளை மாளிகையில 'சாம்பியன்ஸ் ஆஃப் சேஞ்ச்'ன்னு ஒரு விருதை இவுங்களுக்கு போன வாரம் கொடுத்திருக்காங்க.

வாண்டு: எதுக்காக அந்த விருது கொடுத்தாங்களாம்? அதைச் சொல்லு.

பாண்டு: இந்தக் குட்டிப் பொண்ணு 'எவ்ரிபடி கோடு நவ்'ன்னு ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதோட தலைமை செயல் அதிகாரியாக இருக்காங்காளாம். இந்த நிறுவனத்துல நம்மள மாதிரி குட்டிப் பசங்க வலைதளங்களை உருவாக்க 'புரோகிராம்' எழுத கத்துக் கொடுத்தாங்களாம். அப்புறம் இன்ஜினீயர், விஞ்ஞானி, பிசினஸ்மேன்களை உருவாக்குற முயற்சில ஈடுபட்டிருக்காங்களாம். அதுக்குதான் இந்த விருது.

வாண்டு: இந்த சின்ன வயசிலேயே பெரிய சாதனை படைச்சிருக்காங்கடா. நாமும் ஸ்வேதாவுக்கு 'மாயா பஜார்' மூலமா வாழ்த்தைச் சொல்லிடுவோம்.

பாண்டு: ஐயோ, எங்கம்மா வராங்க. படிக்காம பேசிக்கிட்டு இருக்கியான்னு திட்டுவாங்க. நான் போறேன்பா.

வாண்டு: சரி பாண்டு, அடுத்த புதன்கிழமை குவார்ட்டர்லி லீவு விட்டுருவாங்கள்ல. அப்போ நிறைய பேசுவோம். டாட்டா, சீ யூ...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x