Published : 12 Aug 2015 11:46 AM
Last Updated : 12 Aug 2015 11:46 AM

நீங்களே செய்யலாம்: ஐஸ்குச்சி டப்பா

வீட்டில் பேனா, ஸ்கெட்ச், பென்சில்களைக் கண்ட இடத்தில் வைத்துவிட்டுப் பின்னர் தேடுவீர்கள் இல்லையா? அவற்றை ஒரே இடத்தில் அழகான டப்பாவில் போட்டு வைக்கலாமா? அந்த அழகிய டப்பாவை நீங்களே செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

பிளாஸ்டிக் பாட்டில், பெயிண்ட் பிரஷ், உங்களுக்குப் பிடித்த இரண்டு சாயங்கள், கத்தரிக்கோல், பசை, ஐஸ் குச்சிகள்.

செய்முறை:

l உங்களுக்குப் பிடித்த சாயங்களை ஐஸ் குச்சிகளுக்குத் தீட்டுங்கள். அவற்றைக் கொஞ்ச நேரம் காயவையுங்கள்.

l ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து அதன் மேல் பகுதியை வெட்டி எடுத்துவிடுங்கள்.

l இதன்பிறகு ஐஸ் குச்சிகளை பாட்டிலின் கீழ் பகுதியில் பசை கொண்டு ஒட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது அழகான பென்சில் வைக்கும் டப்பா தயார். இவற்றில் பென்சில்கள், பேனாவை நீங்கள் போட்டு வைக்கலாமே!

- படங்கள்: மோ.வினுப்பிரியா



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x