Published : 23 Oct 2019 12:42 PM
Last Updated : 23 Oct 2019 12:42 PM
பக்தவத்சலம் சஷ்டியப்தபூர்த்தி உயர்நிலைப் பள்ளி, ஆத்தூர், செங்கல்பட்டு
1958-ம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஓ.வி. அளகேசன் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. ஏழை விவசாயக் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகள் சிறந்த கல்வி பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சிறப் பாகக் கல்விச் சேவை ஆற்றி வருகிறது.
பொதுத் தேர்வுகளில் இதுவரை 5 முறை 100% தேர்ச்சியைப் பெற்றிருக் கிறது. மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் பலமுறை வெற்றி பெற்றிருக்கிறார்கள் இந்தப் பள்ளி மாணவர்கள்.
தூய்மை, உடற் பயிற்சி, கல்விச் சுற்றுலா, ஆங்கிலப் பேச்சு, புவி வெப்பமய மாதலைத் தடுத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, தீத்தடுப்பு, போக்குவரத்து விதிகள் போன்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏழை மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்தி, நோட்டு, புத்தகம் கொடுத்து, மாலை சிறப்பு வகுப்புகள் நடத்தி, அவர்களின் முன்னேற்றத்துக்கு வித்திடுகிறார்கள் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும்.
1958-ம் ஆண்டு முதல் காந்தி ஜெயந்தியை வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. மற்ற பள்ளிகளையும் இணைத்துப் போட்டிகள் நடத்தி, பரிசுகளையும் அளித்து வருகிறது. இதுவரை 10 முறை இந்தப் பள்ளியே முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர், கழிவறை, விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் இங்கே இருக்கின்றன.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மருதம், உத்திரமேரூர்.
1948-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டு, 70 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறப்பான கல்விப் பணியாற்றி வருகிறது. கதை சொல்லும் ஓவியங்கள், காற்றோட்டமான வகுப்பறைகள், கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், விளையாட்டுத் திடல் போன்ற வசதிகள் இங்கே இருக்கின்றன. மாணவர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பயன்பாடு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
கணிதம், ஆங்கிலம், அறிவியல், கலைஇலக்கிய மன்றங்கள் மூலம் மாணவர்களின் தனித்திறன்கள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன. பல்வேறு பேச்சு, கட்டுரை, கலை, ஓவியம், விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். மாணவர்கள் ஒன் றிய, மாவட்ட அளவில் நடை பெறும் துளிர் வினாடிவினாப் போட்டி, துளிர் திறனறிவுத் தேர்வு போன்றவற்றில் பங்கு பெற்று, சிறப்பிடம் பெற்றிருக் கிறார்கள். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாணவர்கள் ஆய்வறிக்கை யைச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.
மாதந்தோறும் நடைபெறும் கணித மன்றத்தில் கணித விளையாட்டுகள், கணிதப் புதிர்கள், அபாகஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியப் பங்கினை விளக்கும் நாடகங்கள், விவாதங்கள், கருத்தரங்குகள் சிறப்பாக நடைபெற்று, கணிதம் விரும்பத்தக்கப் பாடமாக மாணவர்களுக்கு மாறிவிட்டது.
தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வில் (NMMS) இப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து தேர்ச்சி பெற்று வருகிறார்கள். மரக்கன்றுகள் நட்டு கிராமத்தைப் பசுமையாக்கல், கிராமப்புறத்தைச் சுத்தப்படுத்துதல் போன்ற செயல் பாடுகளைப் பள்ளிப் பசுமைப்படை, செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சிறப் பாக செயல்படுத்தி வருகிறார்கள் மாணவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT