Published : 22 May 2014 11:11 AM
Last Updated : 22 May 2014 11:11 AM
இது ‘எக்ஸோகோடிடடே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்த மீன். இதைத்தான் பறக்கும் மீன் என்று அழைக்கின்றனர். அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடலில் அதிகம் காணப்படும் மீன். பொதுவாக மீன் நீந்துவதற்கு அதன் துடுப்புகளையே பயன்படுத்தும். இந்த மீன் அதைப் பறக்கவும் பயன்படுத்திக் கொள்கிறது. அதுதான் இந்த மீனின் சிறப்பு. இதன் துடுப்புகள் மற்ற மீன்களுக்கு உள்ளது போல் இருக்காது. பெரியதாகவும், பறவைகளின் இறகுகளைப் போலவும் இருக்கும்.
கடலில் தொடர்ந்து 1300 மீட்டர் தொலைவுக்கு எக்ஸோகோடிடடே மீனால் பறக்க முடியும். இதன் வால் நிமிடத்திற்கு சுமார் 70 முறை வேகமாக ஆடக் கூடியது. அதனால் உடலை சமநிலைப்படுத்தி (பேலன்ஸ்), தன் இறக்கையை விரித்து டால்பின் போல தண்ணீரிலிருந்து மேலே எழும்பிப் பறக்கிறது. நீரினுள் இருக்கும் போதே பறப்பதற்கு முன் ஓடுதளத்தில் ஓடும் விமானம் போல் வேக மெடுத்து, நீரின் மேற்பரப்பை நோக்கி இந்த மீன் நீந்தி வரும். நீர்பரப்பை அடைந்ததும் தன் துடுப்புகளை முழுவதும் விரித்துத் துள்ளித் தாவும். சுமார் 20 அடி உயரம் வரை பறக்க முடியும். மீண்டும் தண்ணீருக்குள் செல்லும்போது துடுப்புகளை சுருக்கிக் கொள்ளும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT