Last Updated : 29 Jul, 2015 12:20 PM

 

Published : 29 Jul 2015 12:20 PM
Last Updated : 29 Jul 2015 12:20 PM

மேஜிக்... மேஜிக்...- அந்தரத்தில் நிற்கும் பென்சில்

குழந்தைகளே, மேஜிக்குகளை உங்கள் நண்பர்களுக்குச் செய்துகாட்ட ஆரம்பித்து விட்டீர்களா? இதோ இந்த வாரமும் ரொம்ப சுலபமான ஒரு மாயாஜாலத்தை செய்து காட்ட நீங்கள் தயாரா? பென்சிலை உங்களால் அந்தரத்தில் நிற்க வைக்க முடியுமா? அப்படி நிற்க வைக்க முடியும் என்று சொல்லி உங்கள் நண்பர்களிடம் இந்த வித்தையைச் செய்து காட்டுங்களேன்.

என்ன தேவை?:

பென்சில்

எப்படிச் செய்வது?:

1. உள்ளங்கையில் வைத்து பென்சிலை விரல்களால் மடித்து அதை கெட்டியாகப் பிடித்துகொள்ளுங்கள்.

2. இப்போது மற்றொரு கையைக் கொண்டு பென்சிலைப் பிடித்துள்ள கையின் மணிக்கட்டை அழுத்தமாகப் பிடித்துகொள்ளுங்கள்.

3. இப்போது பென்சிலை பிடித்துள்ள விரல்களை மெல்லமாக விரியுங்கள். மெல்லமாக விரிக்கும்போது, ‘ஜூ… மந்திரக்காளி... பென்சிலை அந்தரத்தில் நிற்க வை..’ என மிரட்டும் குரலில் சொல்லி விரலை விரியுங்கள்.

4. நீங்கள் பிடித்துகொண்டிருந்த பென்சில் கீழே விழாமல் அப்படியே கையோடு சேர்ந்து அந்தரத்தில் நிற்கும். பென்சில் கீழே விழாமல் இருப்பதைப் பார்த்து உங்கள் நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

5. இந்த மேஜிக் எப்படி சாத்தியம்? மணிக்கட்டை அழுத்தமாகப் பிடிக்கும்போது, எதிரே உள்ள உங்கள் நண்பர்களுக்கு தெரியாதவாறு ஆள்காட்டி விரலால் பென்சிலைப் பிடித்துகொள்ள வேண்டும். கையின் உள்புறம் பென்சில் இருப்பதால் பார்ப்பவர்களுக்கு அது அந்தரத்தில் நிற்பது போல தெரியும். மணிக்கட்டைப் பற்றியுள்ள விரல்களை எடுத்ததும் பென்சில் கீழே விழும்.

அந்தரத்தில் நிற்கும் பென்சிலின் சூப்பர் மேஜிக் இதுதான். இதை அடிக்கடி செய்து காட்டி உங்கள் நண்பர்களை அசத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x