Published : 10 Jun 2015 02:35 PM
Last Updated : 10 Jun 2015 02:35 PM
ஒரு காட்டில் சிங்கம், புலி, சிறுத்தை, காண்டாமிருகம், யானை, மான், குரங்குகள் போன்ற விலங்குகள் வாழ்ந்துவந்தன. அதே காட்டில் வாழ்ந்த வேடர்கள் யானை, குரங்குகளைப் பிடித்து விற்றுப் பணம் சம்பாதித்து வந்தார்கள். சிலர் அதைப் பிடித்துப் பிழைப்புக்காக வித்தை காட்டியும் வாழ்க்கை நடத்தினார்கள்.
சில நேரங்களில் காட்டில் யானை, மான், குரங்குகளுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. அதனால் தண்ணீர் குடிப்பதற்காக அவை காட்டை விட்டு வெளியே வந்துவிடும். தண்ணீர் குடித்தவுடன் மீண்டும் காட்டுக்குள் சென்றுவிடும்.
அப்படி ஒரு முறை யானை ஒன்று காட்டில் இருந்து வெளியே வந்துவிட்டது. ஆனால், அது காட்டுக்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் ஊருக்குள் அலைந்தது. யானையைப் பிடிக்க ஊர் மக்கள் ஒரு பெரிய பள்ளத்தைத் தோண்டினார்கள். பள்ளத்தின் மேல் இலை, தழைகளைப் போட்டு மூடி வைத்தார்கள். அந்த வழியாக வந்த யானை தொப்பென்று பள்ளத்தில் விழுந்தது. பிறகு யானையைக் காப்பாற்றிக் காட்டுக்குள் அனுப்பிவைத்தார்கள்.
சில நாட்கள் கழித்து அதேபோல மற்றொரு யானையைப் பிடிக்கப் பள்ளம் தோண்டி வைத்தார்கள் ஊர் மக்கள். ஆனால், அது தெரியாமல் அந்தப் பக்கம் கம்பீரமாக நடந்து வந்த சிங்கம் பள்ளத்தில் விழுந்தது. அந்தப் பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவன், பரிதாபப்பட்டுச் சிங்கத்தைக் காப்பாற்ற நினைத்தான்.
சிங்கத்தை அந்த வழிப்போக்கன் எப்படிக் காப்பாற்றினான், மேலே வந்தவுடன் சிங்கம் என்ன செய்திருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசையா? அதற்கு ‘அன்பு கொள்’ என்னும் நீதிக் கதை புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.
இந்த மாதிரி 25 நீதிக் கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. குழந்தைகளைக் கவரும் வகையில் மிகவும் எளிமையாக எழுதியிருக்கிறார் கமலா சுவாமிநாதன்.
நூல்: அன்பு கொள் (நீதிக் கதைகள்),
ஆசிரியர்: கமலா சுவாமிநாதன்,
பதிப்பகம்: வானதி பதிப்பகம், முகவரி: 23,
தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை - 17.
தொடர்புக்கு 044- 2434 2810.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT