Last Updated : 01 Apr, 2015 12:54 PM

 

Published : 01 Apr 2015 12:54 PM
Last Updated : 01 Apr 2015 12:54 PM

பூமிக்கு வந்த ரோபோ

வானத்துல எத்தனை கோள்கள் இருக்கு? எட்டு இருக்கு இல்லையா? நாம வாழ்ந்துட்டு இருக்கிற பூமியும் ஒரு கோள்தான். அப்படினா மத்த கோள்கள்லயும் நம்மள மாதிரி மனுஷங்க இருக்குறாங்களானு கேட்டா, இதுவரைக்கும் இல்லை. இப்போதான் செவ்வாய் கோள்ல மனுஷங்க வாழ முடியுமான்னு ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்காங்க. ஏன்னா பூமி கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுகிட்டு வருது.

இன்னும் சில ஆயிரம் வருஷத்துல பூமி அழிஞ்சு போயிடலாம்னு விஞ்ஞானிகள் எல்லாம் சொல்றாங்க. பூமியில இருக்கிற மரங்கள எல்லாம் நாம வெட்டிக்கிட்டு இருக்கோம். செடி வளர்ந்த இடத்துல கட்டிடமாக கட்டி வச்சுட்டு இருக்கோம். பாலீத்தீன் / பிளாஸ்டிக் பைகள நாம தூக்கி எறியுறோம்.

அது பூமி மேல ஒரு கவர் மாதிரி மூடி மழைத் தண்ணிய பூமிக்குள்ள இறங்காம தடுத்துடுது. அதனால பூமியை தண்ணீ இல்லாம போயிரும். தண்ணீ இல்லைனா மரம், செடிகள் இருக்காது. மரம், செடி இல்லைன்னா ஆக்ஸிஜன் இல்ல. ஆக்ஸிஜன் இல்லனா நாம இல்ல. அப்ப பூமியில நாம வாழ முடியாது இல்லையா?

‘வால்-இ’ படத்துல அப்படியான ஒரு டைம் வருது. ஒரு சின்ன செடிகூட முளைக்காத அளவுக்கு பூமி கெட்டுப் போயிடுது. எங்க பார்த்தாலும் குப்பைக் குவியலா இருக்கு. பூமியில இருந்து மனுஷங்க எல்லாரும் வெளியேறனும்ணு உலகத் தலைவர் சொல்றாரு.

வானத்துல மிதக்கிற மாதிரி கோள் செஞ்சு, அதுல குடியிருக்க முடிவு பண்ணி எல்லா மனுஷங்களும் கிளம்பிப் போயிடுறாங்க. அப்ப குப்பையா இருக்குற பூமிய சுத்தம் பண்ண ‘வால்-இ ’அப்படிங்கிற ரோபோக்கள பூமில விட்டுட்டு போறாங்க. திரும்பவும் பூமியில எப்போ செடி முளைக்குதோ அப்போதான் மனுஷங்க திரும்ப பூமிக்கு வர முடியும்.

குட்டி வால்-இ

இப்படி வால்-இ போயி நூறு வருஷத்துக்கு மேல ஆகிடுது. சுத்தம் பண்ற ரோபோக்கள் எல்லாம் குப்பைய எல்லாம் தன்னோட வயித்துக்குள்ள போட்டு செங்கல் மாதிரி சைஸ்ல அமுக்கி ஒரு இடத்துல அடுக்கி வைக்குதுங்க. இப்படியே அடுக்கி பெரிய கட்டிட சைஸ்ல வைக்குதுங்க. வருஷம் ஆக ஆக எல்லா ரோபோக்களும் செத்துப் போயிடுதுங்க. ஆனால் ஒரே ஒரு ரோபோ மட்டும் தப்பி உயிர் வாழ்ந்திட்டு இருக்கு.

அதுதான் நம்ம படத்தோட ஹீரோ. அந்த வால்-இ தனியா செய்யுது. சாயங்காலம் ஆனதும் அதோட ஒரே ஒரு ஃப்ரண்டான கரப்பான் பூச்சிய கூட்டிகிட்டு வீட்டுக்கு வந்திடும். வீடுன்னா பழைய வேன்தான் அதோட வீடு. பூமியில அதுவும் ஒரு கரப்பான் பூச்சி மட்டும்தான் அப்போ உயிரோட இருக்கு. குப்பை எடுக்கும்போது பார்க்குற சின்னச் சின்ன பொருள்களை எல்லாம் வீட்டுக்கு ஒரு பாக்ஸ் போட்டு எடுத்துட்டு வந்து சேமிக்கிறது வால்-இயின் ஹாபி. நீங்க ஸ்டாம்ப், ஸ்டிக்கர்ஸ் சேமிக்கிற மாதிரி.

வால்-இ சாப்பாடு என்னதுன்னா, சன்லைட்தான் (சூரிய ஒளி). காலையில வெயில்ல நின்னாபோதும். அதுக்கு வேலை செய்யுறதுக்கான எனர்ஜி கிடைச்சுடும்.

செடி தேடும் ரோபோ

இப்படி அதோட லைஃப் போயிட்டு இருக்கும்போது வானத்துல உள்ள மனுஷங்க பூமிக்கு ராக்கெட் அனுப்புறாங்க. அதாவது இங்க செடி முளைச்சிடுச்சான்னு செக் பண்ண ரோபோக்கள அனுப்புவாங்க. அப்படி செக் பண்ண முட்டை சைஸ்ல ஒரு க்யூட் ரோபோவ அனுப்பி வைக்குறாங்க.

பூமியில ஃப்ரெண்ட்ஸே இல்லாத வால்-இக்கு இந்தப் புது ரோபாவைப் பார்த்ததும் பிடிச்சிபோயிடுது. அந்த புது ரோபோவுக்கு இதுவே ‘இ-வா’ன்னு பெயர் வச்சிடுது. அதுக்கு பயங்கர சந்தோஷம். முதல்ல இ-வாக்கு வால்-இ சொல்றது புரியல. அது ஒவ்வொரு இடமா போயி ஸ்கேன் பண்ணி செடி இருக்கான்னு தேடிக்கிட்டே இருக்கு. அது பின்னாடி போயி வால்-இ பேச்சுக் கொடுத்துப் பார்க்குது. கொஞ்ச கொஞ்சமா ரெண்டும் ஃப்ரெண்ட்ஸா ஆகுதுங்க.

வால்-இ தன்னோட வீட்டுக்கு இ-வாவைக் கூட்டிட்டுப் போகுது. அங்க போயி சேமிச்சு வச்சிருக்கிற விளையாட்டுப் பொருள்கள் ஒவ்வொன்னையும் காட்டுது. இ-வா எல்லாத்தையும் வாங்கி வாங்கி ஸ்கேன் பண்ணி பண்ணி செடி இருக்கான்னு பார்த்து கீழே போடுது.

வால்-இக்கு நாம கொடுக்கிற பொருள் அதுக்குப் பிடிக்கலைன்னு நினைச்சுக்கிட்டு வீட்ல இருக்குற பொருள்கள் எல்லாத்தையும் எடுத்துக்காட்டுது. கடைசியா வால்-இ கடைசியா சேமிச்சு வச்ச ஒரு பொருள எடுத்து இ-வா கிட்ட காட்டுது. இ-வா அதையும் ஸ்கேன் பண்ணதும் கிரீன் சிக்னல் கிடைக்குது. அது உடனே அந்தப் பொருளை வாங்கி வயிற்றுக்குள்ள வச்சுகிட்டு சைலண்ட் ஆயிடுது. அது என்ன பொருள்னா, அது ஒரு செடி.

ஜெயிலுக்குப் போன இ-வா

செடிய தேடிதானே இ-வா வந்திருக்கு. அதனால அது கிடைச்சதும் அது ஊமை மாதிரி ஆயிருது. வால்-இக்கு இ-வா பேசாம சைலண்ட் ஆனதும் கவலையா போயிடுது. ராத்திரி பகலும் அது பக்கத்துலேயே உட்கார்ந்து பார்க்குது. கடைசியா இ-வா செடிய கண்டுபிடிச்ச விஷயம் வானத்துல உள்ள மனுஷங்களுக்கு சிக்னல் மூலம் தெரிஞ்சிடுது. உடனே அவுங்க இ-வாவைக் கூட்டிட்டுப் போக ரோபாவை அனுப்புறாங்க.

ராக்கேட் வந்தது இ-வா ஏறிடுது. இதைப் பார்த்ததும் ‘இ-வா... இ-வா...’ கத்திக்கிட்டே நம்ம வால்-இ, ஹீரோ மாதிரி ராக்கெட்ல ஏறிடுது. ராக்கெட் வானத்துல வந்ததும். மத்த ரோபோ எல்லாம் இ-வாவை கேப்டன் கிட்ட கூட்டிட்டு போகுதுங்க. வால்-இயும் பின்னாடியே போகுது. அந்த கோள் முழுக்கவும் மனுஷங்க இருக்காங்க. ஆனால், அவுங்க நம்மள மாதிரி இல்ல. கை, கால் எல்லாம் குள்ளமா, நடக்க முடியாமா முழுக்க ரோபாக்களை நம்பியே இருக்காங்க. இ-வாவைத் தொடர்ந்து போகும்போது வால்-இ இதை ஆச்சரியமா பார்த்துகிட்டே போகுது.

கடைசியா கேப்டன் கிட்ட இ-வா வந்ததும்தான் அதுக்கு நினைவே வருது. கேப்டன் இ-வா வயிற்றைத் திறந்து பார்க்குது. ஆனால், ஒரே அதிர்ச்சி. வால்-இ கொடுத்த செடி வயித்துல இல்லை. வால்-இக்கும் இதைப் பார்த்தும் அதிர்ச்சி. இ-வாவுக்கு அப்பதான் வால்-இ ராக்கெட்ல ஏறி வந்த விஷயமே தெரிய வருது. அதுவும் அதிர்ச்சியாகுது.

செடி முளைச்சிட்டு பூமிக்குத் திரும்பப் போறோம்னு சந்தோஷத்துல இருந்த கேப்டனுக்கு பயங்கற கோபம். இ-வாவைப் பிடிச்சு ஜெயில்ல போடச் சொல்லிடுறாரு. வால்-இயும் இ-வா கூடயே ஜெயிலுக்கு போகுது. ஜெயிலில் இருந்து வால்-இயும் இ-வாவும் எப்படித் தப்பித்தன, மனுஷங்க பூமிக்குத் திரும்புனாங்களான்னு தெரிஞ்சுக்க ஆசையா? அப்போ ‘வால்-இ’ படம் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x