Published : 22 May 2014 03:56 PM
Last Updated : 22 May 2014 03:56 PM

மலைவாச வரையாடு

#தமிழ்நாட்டின் மாநில விலங்கு நீலகிரி வரையாடு. அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் வரையாடு இடம்பெற்றுள்ளது.

#வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படுகின்றன.

# கடல் மட்டத்திலிருந்து 1,200 முதல் 2,600 மீட்டர் உயரம் உள்ள மலையில் புற்கள் அடர்ந்த சோலைப் புல்வெளி பகுதியில் இவை வசிக்கும்.

# பாறைகளில் முளைத்துள்ள புற்களையும், தாவர இலைகளையும் இவை உண்ணும்.

# முதிர்ந்த ஆண் வரையாடு சராசரியாக 100 கிலோ எடையும் 110 செ.மீ. உயரமும் இருக்கும். பெண் வரையாடு சராசரியாக 50 கிலோ எடையும் 80 செ.மீ. உயரமும் இருக்கும்.

# பெண் வரையாட்டின் கொம்பு ஆண் வரையாட்டின் கொம்பைவிடக் குட்டையாகவும் பின்னோக்கிச் சரிவாகவும் காணப்படும்.

# ஆண் வரையாடு அடர் பழுப்பும் (Dark Brown) மெல்லிய கறுப்பும் கலந்த வண்ணத்தில் இருக்கும். பெண் சாம்பல் நிறத்தில் காணப்படும்.

# ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் வரையாடுகள் இனப்பெருக்கம் செய்யும். ஆறு மாத காலம் வயிற்றில் குட்டியைச் சுமக்கும்.

#இவற்றின் சராசரி ஆயுள் காலம் மூன்று முதல் மூன்றரை ஆண்டுகளே. ஆனால், சில வரையாடுகள் ஓராண்டு கூடுதலாகவும் வாழ்கின்றன.

# 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 2,600 வரையாடுகள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் 5 சதவிகித இடங்களில் பரவியுள்ள இவை தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டுமே வாழ்கின்றன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x