Last Updated : 10 Apr, 2014 04:10 PM

 

Published : 10 Apr 2014 04:10 PM
Last Updated : 10 Apr 2014 04:10 PM

உயிரினம் பூனை: சத்தமின்றி வேட்டை

* உலகில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் ஒன்று பூனை.

* உலகம் முழுவதும் 50 கோடி பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

* மனிதனுக்கும் பூனைக்கும் இடையிலான பந்தம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.

* ஒரு நாளைக்கு இயல்பாக 13 முதல் 14 மணி நேரம் வரை தூங்கித் தன் ஆற்றலைச் சேமிக்கக்கூடியது பூனை.

* பூனைகளின் உடல் நெகிழ்வானது. எலிகள் போன்ற சிறு உயிர்களைச் சாப்பிடுவதற்கு ஏற்ற கூர்மையான பற்களைக் கொண்டவை.

* வீட்டுப் பூனைகள் சராசரியாக 4 கிலோ முதல் 5 கிலோ வரை எடை இருக்கும்.

* பூனைகள் அமைதியாக அடி எடுத்து வைத்து வேட்டையாடும் திறன் கொண்டவை. முன் கால்களை வைத்த அதே இடத்தில்தான் பின்னங்கால்களையும் வைக்கும். இதனால் சத்தமே இன்றி அவற்றால் வேட்டையாட முடியும்.

* பூனைகளுக்குத் துல்லியமான பார்வைத் திறன் உண்டு. குறிப்பாக இரவு நேரத்தில் மனிதன் ஒரு பொருளைப் பார்ப்பதற்குத் தேவைப்படும் ஒளியைவிட, ஆறு மடங்கு குறைவான ஒளியிலும் பூனைகளுக்குப் பொருட்கள் தெரியும்.

* பூனைகளுக்குச் கேட்கும் திறனும், மோப்பத் திறனும் அதிகம்.

* பெரிய பூனைகள் சில சமயங்களில் மிகவும் கோபமாகக் குட்டிகளிடம் நடந்துகொள்ளும்.

* வீட்டுப் பூனைகளிடம் விளையாட்டுக் குணம் உண்டு. அதுவும் குட்டிப் பூனைகளிடம் பொம்மை, பந்துகளைக் கொடுத்தால் ரசித்து விளையாடும்.

* குட்டிப் பூனைகளுக்கு இடையில் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள் மூலம் வேட்டையாடவும் சண்டைத் திறனையும் அவை கற்றுக்கொள்கின்றன.

* ஒரு பூனையின் சராசரி ஆயுள் 12 முதல் 15 ஆண்டுகள்.

* பூனை சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும்பகுதியை உடலின் மேற்பகுதியை நக்கிச் சுத்தம் செய்வதில் செலவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x