Published : 10 Apr 2014 04:13 PM
Last Updated : 10 Apr 2014 04:13 PM
‘முட்டை சாப்பிடு. முட்டை சாப்பிடறது உடம்புக்கு நல்லது’அப்டின்னு அம்மா, அப்பா சொல்லுவாங்கல்ல. இந்த முட்டை எங்கிருந்து வருது? காய்கறி கடையில இருந்து, அரிசி, பருப்பு வாங்குற கடையில இருந்துதான் அம்மா முட்டை வாங்கிட்டு வருவாங்க. அப்படினா, காய்கறி, பருப்பு, அரிசி மாதிரி செடியிலிருந்து வரக் கூடியதா முட்டைன்னு உங்களுக்கு வேடிக்கையா தோணியிருக்கும். ஆனால் முட்டை கோழிகிட்ட இருந்து வருதுன்னு அம்மா சொல்லிருப்பாங்க, இல்லையா?
இந்த மாதிரி முட்டை போடுறதுக்காகவே கோழியெல்லாம் வளர்ப்பாங்க. அதைக் கோழிப் பண்ணைன்னு சொல்வாங்க. அந்த மாதிரி ஒரு கோழிப் பண்ணைல உள்ள கோழிங்களைப் பத்தின படம் தான் Chicken Run. இந்தப் படத்துல ஒரு கோழிப் பண்ணை வருது. அதுல கோழிங்களையெல்லாம் அடச்சு வச்சிருங்காங்க. அந்தக் கோழிங்களுக்கு வேண்டிய சாப்பாடு கொடுத்துருவாங்க. அதைச் சாப்பிட்டுட்டு முட்டை போடுறது மட்டும்தான் வேலை. ஆனா எவ்வளவு சாப்பாடு கொடுத்தாலும் வீட்லயே இருக்க முடியுமா? சாப்பாடு இல்லைனாலும் பரவாயில்லை. வெளில போய் பசங்களோட விளையாடாம இருக்க முடியுமா?
கோழித் தலைவி ‘ஜிஞ்சர்’
கோழிங்களுக்கும் உள்ளயே இருக்க முடியலை. அந்தக் கோழிங்களோட தலைவிக் கோழி ‘ஜிஞ்சர்’ தப்பிக்கிறதுக்காகப் பல பல திட்டங்கள் போடுது. முதல்ல பண்ணைய சுத்திப் போட்டிருக்கிற கம்பி வேலி பக்கத்துல குழி தோண்டித் தப்பிக்கப் பார்க்குது. ஆனால் மாட்டிக்குது. மறுபடியும் பூமிக்கடியில சுரங்கப் பாதை தோண்டித் தப்பிக்க டிரை பண்ணி, அப்பவும் பிடிபட்டிடுது. ஆனாலும் சோர்ந்து போகாம தொடர்ந்து டிரை பண்ணிக்கிட்டே இருக்குது.
இந்தக் கோழிப் பண்ணையோட உரிமையாளர் மிரண்டா, டெய்லி வந்து எல்லாக் கோழிகளும் முட்டை போட்டிருக்கான்னு செக் பண்ணுவார். அப்படி முட்டை போடாத கோழிகளைப் பிடிச்சுப் போய் சமைச்சு சாப்பிட்டிருவாங்க. அதனால எல்லாக் கோழிகளும் பயப்படுங்க. ஆனாலும் ஒவ்வொரு கோழியா செத்துக்கிட்டுதான் இருந்துச்சு. இப்படியே எல்லாரும் செத்துப் போறதுக்குள்ள இங்க இருந்து தப்பிக்கணுமேன்னு தலைவி ஜிஞ்சர் கவலைப்படுது.
அப்போ மேலே சில பறவைங்க பறந்து போகுது. நம்மாலும் பறக்க முடிஞ்சா தப்பிச்சுப் போயிரலாம்ணு நினைக்குது (கோழிங்க பறவை இனத்தைச் சேர்ந்ததா இருந்தாலும், அதால பறக்க முடியாது).
அப்போ வானத்துல ஒரு சேவல் பறந்து போறத ஜிஞ்சர் பார்க்குது. அது திடீர்னு ஒரு கம்பில மோதி கோழிப் பண்ணைக்குள்ள விழுந்துருது.
ஜிஞ்சர் மற்ற கோழிகளோடு சேர்ந்து அதைக் காப்பாத்தி பண்ணைக்குள்ள மறச்சு வைக்குது. அதுகிட்ட இருந்து பறக்குற வித்தையைக் கத்துகிட்டு தப்பிச்சு போறதா திட்டம். ஆனால் அதுக்குள்ள கோழிப் பண்ணையோட உரிமையாளர் மிரண்டா கோழிங்க எல்லாத்தையும் வெட்டி விக்கிறதுக்கான ஒரு புது மிஷின வாங்குறார்.
அந்த மிஷினுக்குள்ள ஒரு கோழியப் போட்டா, வெளிய வரும்போது கோழிக் கறியா வந்திரும். அத செக் பண்ண முதல்ல கோழித் தலைவி ஜிஞ்சரை மிஷினுக்குள்ள போடுறாங்க.
கோழித் தலைவி ஜிஞ்சருக்கு என்ன ஆனது? மற்ற கோழிகள் தப்பித்தனவா? Chicken Run படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT