Last Updated : 07 Jan, 2015 11:29 AM

 

Published : 07 Jan 2015 11:29 AM
Last Updated : 07 Jan 2015 11:29 AM

இருபத்தைந்தாவது ஆடு எங்கே?

நம்ம ஊர்ல இருக்கற மாதிரியே, வெளி நாடுகளிலும் நிறைய குழந்தைக் கதைகள் உண்டு. உலகத்துல எங்கே இருந்தாலும் எல்லாக் குழந்தைகளும் குறும்பும் சேட்டையும் பண்ணுவாங்க இல்லையா? அவங்கள்ள ஒருத்தன்தான் ஸ்பெயின் நாட்டுல ஒரு குட்டிக் கிராமத்துல வசிக்கிற ஜூவான் ரிவாஸ்.

ரிவாஸ், சேட்டைக்காரன் மட்டுமில்ல, புத்திசாலியும்கூட. அந்த ஊர்ல அவனைத் தோற்கடிக்கற அளவுக்கு யாரும் ஏழையில்லை. அதே மாதிரி புத்திசாலித்தனத்துலயும் ரிவாஸை யாருமே தோற்கடிக்க முடியாது.

ஒரு நாள் தான் ஒரு பணக்காரனா ஆகப்போறதா தன்னோட நண்பர்கள்கிட்டே ஜூவான் சொல்றான். அதைக் கேட்டு அவங்க சிரிக்கறாங்க. அவங்களை அழைச்சுக்கிட்டு அந்த ஊர்ல இருக்கற பணக்காரர் வீட்டுக்கு ஜூவான் போறான். அவன் நண்பர்களை வெளியே நிற்கச் சொல்லிட்டு, அந்த வீட்டு வேலியைத் தாண்டி குதிச்சான். அடுத்த நிமிஷம் ஒரு ஆட்டுக்குட்டியோட வெளியே வந்தான்.

அதை அவன் நண்பர்கள்கிட்டே கொடுத்தான். நண்பர்களும் ரொம்ப சந்தோஷமா, “இதை வித்து பணக்காரனாகப் போறீயா”ன்னு கேட்டாங்க. “இல்லை”ன்னு சொன்ன ஜூவான், திரும்பவும் வேலிக்குள்ள குதிச்சான்.

அந்த நேரம் பார்த்து அந்த வீட்டு சொந்தக்காரர் வெளியே வர்றாரு. அவர் பின்னால ஒவ்வொரு ஆடா வருதுங்க. வெளியே நிற்கற நண்பர்களுக்கு ஒரே பயம். ஜூவான் நல்லா மாட்டப் போறான்னு பயந்துக்கிட்டே இருந்தாங்க. அந்த ஆடுகளோட சேர்ந்து கடைசியில ஜூவானும் ஆடு மாதிரியே நடந்து வர்றான். அவனைப் பார்த்ததும் ஆடுகளோட சொந்தக்காரருக்கு அதிர்ச்சி. “நீ யாரு, என்னோட இருபத்தைந்தாவது ஆடு எங்கே?”ன்னு கேட்கறாரு.

அதுக்கு ஜூவான், “நான்தான் அந்த ஆடு. ஒரு சாபத்தால இப்படி ஆகிட்டேன். இன்னையோட என் சாபம் முடிஞ்சுடுச்சு. நான் பக்கத்து ஊர் இளவரசர்” அப்படின்னு சொல்றான். அவரும் அதை நம்பி ஜூவான் ஊருக்குத் திரும்பிப் போக குதிரையும் பொற்காசுகளும் கொடுத்து அனுப்புறாரு.

ஒரு வாரம் கழிச்சு அந்த ஊர் சந்தையில தன்னோட இருபத்தைந்தாவது ஆட்டுக்குட்டியைப் பார்க்கிறாரு அதோட சொந்தக்காரர். அப்போ என்ன நடந்துச்சு தெரியுமா?

‘ஒரு பூ ஒரு பூதம்!’ புத்தகத்தை வாங்கிப் படிச்சா உங்களுக்கு அதுக்கான விடை தெரியும். இந்தப் புத்தகத்துல மொத்தம் 12 அயல்நாட்டுக் கதைகள் இருக்கு. அதுல ஒரு ஜென் கதையும் உண்டு. எல்லாமே படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டுற மாதிரியான கதைகள். நீங்களும் படிச்சுப் பாருங்களேன்?

புத்தகம்: ஒரு பூ ஒரு பூதம்!

ஆசிரியர்: மருதன்

விலை: ரூ.40

வெளியீடு: கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங்ஸ், 47 - NP,

ஜவஹர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை-32.

தொலைபேசி: 044-43438822.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x