Published : 02 Aug 2017 12:58 PM
Last Updated : 02 Aug 2017 12:58 PM

சூரியகாந்தி

# சிறுவர்கள் விரும்பி வரையக்கூடிய பூக்களில் ஒன்று . வின்சென்ட் வான் காவின் ஓவியம் உலகப் புகழ்பெற்றது.

# யின் தாயகம் வட அமெரிக்கா. 60 வகையான கள் அங்கே இருந்தன. கி.மு.2,600-களில் மெக்சிகோவில் முதன்முதலாக பயிரிடப்பட்டது. இன்று உலகம் முழுவதும் பரவிவிட்டது.

# வேகமாக வளரக்கூடிய தாவரங்களில் ஒன்று. 3 முதல் 18 அடி உயரம் வரை வளரக்கூடியவை. 6 மாதங்களில் 12 அடி உயரத்தை எட்டிவிடுகின்றன.

# நாம் பூ என்று அழைக்கப்படுவது ஒற்றைப் பூ அல்ல. 2 ஆயிரம் சிறு பூக்கள் சேர்ந்து ஒரே பூவாகக் காட்சியளிக்கிறது!

# முழுவதும் இதழ் விரியாத மொட்டுகளே சூரியனை நோக்கித் திரும்பியிருக்கும். கிழக்கில் ஆரம்பித்து மேற்கில் மறையும்வரை மொட்டுகளும் திரும்புகின்றன. இரவில் மீண்டும் கிழக்குப் பக்கம் நின்றுவிடுகின்றன. இதற்குக் காரணம் கதிரொளி தொடரியல்பு (Heliotropism) என்கிறார்கள். நன்றாக மலர்ந்த பின்னர் சூரியனை நோக்குவதில்லை. காட்டு பூக்கள் சூரியனை நோக்கித் திரும்புவதில்லை.

# மஞ்சள், சிவப்பு, அரக்கு நிறங்களில் பூக்கள் காணப்படுகின்றன. விதைகள் சுவையானவை, ஆரோக்கியமானவை, சத்து நிறைந்தவை. வைட்டமின்கள் பி, இ, செலினியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கனிமங்கள் இதில் இருக்கின்றன.

# அமெரிக்கப் பழங்குடி மக்கள் யை மிக முக்கியமானதாகக் கருதினார்கள். பூக்களில் இருந்து நிறத்தை எடுத்தார்கள். விதைகளை உணவாகவும் மருத்தாகவும் பயன்படுத்தினார்கள். பறவைகளுக்கும் கொறி விலங்குகளுக்கும் பூச்சிகளுக்கும் உணவளிக்கிறது.

# இன்று எண்ணெய் சமையலில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. விதைகள் சூழல் மாசைக் குறைக்கும் பயோடீசலின் உற்பத்தியில் பங்கு வகுக்கின்றன.

# பெரும்பாலும் தாவரங்கள் ஓராண்டு வாழக்கூடியவை. சில வகைகள் இரண்டு ஆண்டுகள் வாழ்கின்றன.

# உக்ரைன் நாட்டின் தேசிய மலர் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x