Published : 12 Jul 2017 11:00 AM
Last Updated : 12 Jul 2017 11:00 AM
கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. தென் அமெரிக்காவிலுள்ள ஒரு நாடு.
2. ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்ற நாடு.
3. ஐ.நாவைத் தோற்றுவித்த நாடுகளில் இதுவும் ஒன்று.
4. இங்குள்ள டியட்ரோ கோலான் உலகின் தலை சிறந்த இசையரங்குகளில் ஒன்று.
5. கைவிரல் ரேகையை அடையாளமாக ஏற்ற முதல் நாடு.
6. நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் என்று கொண்டாடப்படும் மரடோனா இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
7. 1978,1986 ஆகிய ஆண்டுகளில் உலக கால்பந்துக் கோப்பையை கைப்பற்றிய நாடு.
8. இந்த நாட்டின் பெயர் 'வெள்ளி' உலோகத்தின் அறிவியல் பெயரை அடிப்படையாகக் கொண்டது.
9. இதன் தலைநகரம் ப்யூனோஸ் ஏரெஸ்.
10. சிலி, பிரேசில், உருகுவே, பொலிவியா, பராகுவே என்ற 5 நாடுகள் இந்த நாட்டில் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT