Published : 29 Jun 2016 11:57 AM
Last Updated : 29 Jun 2016 11:57 AM
குழந்தைகளே, போன வாரம் கொடுக்கப்பட்ட இணையதளத்துக்குள் சென்று பார்த்தீர்களா? பல விஷயங்களைத் தெரிந்துகொண்டீர்களா? இந்த வாரம் விளையாட்டுப் பொருட்கள் செய்யக் கற்றுக்கொடுக்கும் ஒரு இணையதளத்தைப் பார்ப்போமா?
ஆரிகாமி பற்றி உங்களுக்குத் தெரியுமா? தாள்களை மடித்துப் பலவித உருவங்களைச் செய்வார்களே, அதுதான் ஆரிகாமி. இது ஜப்பான் நாட்டில் பிறந்த ஒரு கலை. உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பாகூட சிறுவர், சிறுமிகளாக இருந்தபோது விலங்குகள், பழங்கள், பூக்கள் எனப் பலவிதமான உருவங்களைக் காகிதத்தில் செய்து மகிழ்ந்திருப்பார்கள். இந்த வித்தியாசமான கலையை அவர்கள் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்களா?
இல்லையென்றால் கவலையே வேண்டாம். ‘ஆரிகாமி கிளப்’என்ற இணையதளம் ஆரிகாமி கலைப் பொருட்களை எப்படிப் படிப்படியாகச் செய்வது என்பதை சொல்லிக்கொடுக்கிறது. இந்த இணையதளத்தில் விலங்குகள், வாகனங்கள், கடல்வாழ் உயிரிகள், பூக்கள், உடைகள், டைனோசர், மனிதர்கள் என இன்னும் நிறைய தலைப்புகளில் ஆரிகாமி கலைப் பொருட்கள் செய்ய சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
வரைபடமாக வரைந்து ஆரிகாமி கலைப் பொருட்களை எப்படிச் செய்வது என்று கற்றுகொள்ளலாம். எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அனிமேஷன் முறையில் பொருட்களைச் செய்யவும் இணையதளத்தில் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
பள்ளி விடுமுறையின்போது வீட்டில் சும்மா இருந்தால், ஆரிகாமி கலைப் பொருட்களைச் செய்து நேரத்தைச் செலவிடலாம். கற்றுக்கொள்ள நீங்கள் தயாரா? அப்போ, > en.origami-club.com என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT