Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM
டால்பின்கள் மிகவும் புத்திசாலித் தனமானவை என்று கருதப்படுகின்றன.
# டால்பின் அசைவப் பிராணி.
# ஓர்கா என்றழைக்கப்படும் திமிங்கிலங்கள் டால்பின் வகையைச் சேர்ந்தவை.
# பெண் டால்பின்கள் பசுக்கள் என்றும் ஆண்கள் காளைகள் என்றும் குட்டி டால்பின்கள் கன்றுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
# டால்பின்கள் விளையாட்டுத்தனம் நிறைந்தவை. அதனாலேயே மனிதர் களுக்குப் பிடித்தவை. தண்ணீரிலிருந்து துள்ளிக் குதிக்கும். அலையின் மேலேறி விளையாடும். குட்டிச் சண்டைகள் போடும்.
# டால்பின், தன் தலை மீது இருக்கும் துளையால் சுவாசிக்கும்.
#டால்பின்களின் பார்வைத்திறனும், செவித்திறனும் வலிமையானவை. வௌவால்களைப் போன்றே மீயொலி அலைகளை அனுப்பிப் பொருட்களின் இருப்பிடத்தைச் சரியாக டால்பின்களால் அறிய முடியும்.
# டால்பின்கள் விசிலடித்து தங்களுடைய சகாக்களிடம் தொடர்பு கொள்ளக்கூடியவை.
# மனிதர்களின் வேட்டையால் சில டால்பின் வகைகள் அழியும் அபாயத்தில் உள்ளன. யாங்ட்சி ஆற்றில் வசித்த டால்பின் வகைகள் சமீபத்தில் முழுமையாக அற்றுப்போனது ஒரு உதாரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT