Published : 09 Oct 2013 04:10 PM
Last Updated : 09 Oct 2013 04:10 PM

துளி...துளி...

#ஒரு நாளுக்கு எத்தனை மணிநேரம்னு கேட்டால் எல்லோரும் 24 மணி நேரம்னு சொல்வோம். உண்மையில் ஒருநாள் என்பது 23 மணி நேரம், 56 நிமிடங்கள், 4 நொடிகள் மட்டுமே!

#விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லாததால அங்கே உயிர்வாழ முடியாதுன்னு உங்களுக்குத் தெரியும். ஆனால் விண்வெளியில் உயிர் காக்கும் உபகரணங்கள் இன்றி 2 நிமிடங்கள் வாழ முடியுமாம்.

#காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததே இல்லை. பிரிட்டனுக்கும், தென்ஆப்பிரிக்காவுக்கும் கப்பலில்தான் பயணித்திருக்கிறார்.

#பாலைவனம்னாலே கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் மணல்தானே இருக்கும். ஆனால் பெரு நாட்டில் உள்ள செச்சுரா பாலைவனத்தில் மணலே இல்லை. மலை மேடு போலவே காட்சியளிக்கும்.

#ஊர் பெயர்களை மனிதர்களுக்கு வைப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்துக்கு விலங்கின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அந்த ஊரின் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதாம். அப்படி என்ன பெயரா? டைனோசர்!

#நாலா பக்கமும் கையை, காலை நீட்டிக்கிட்டு பார்க்கறதுக்கு அவ்ளோ பெருசா இருக்கற ஆக்டோபஸ், பிறக்கும்போது ஒரு ஈ அளவுதான் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x