Published : 17 Sep 2014 01:44 PM
Last Updated : 17 Sep 2014 01:44 PM
‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்…’ அப்டினு தாத்தா பாட்டிக்கிட்ட கதை கேட்டிரூங்கீங்களா? இப்ப எல்லாம் நீங்க பயங்கரமான பேய்க் கதைகள டி.வி.யில, படத்துல பார்ப்பீங்க இல்லையா? முன்னாடி அப்பா, அம்மா எல்லாம் உங்கள மாதிரி குட்டி பசங்களா இருந்தப்போ இது மாதிரி டி.வி. எல்லாம் எல்லா வீட்லயும் கிடையாது. தாத்தா, பாட்டிங்க சொல்ற கதைதான் டிவி, படம் எல்லாமே. அதுல ராஜா வருவாரு. ராணி வருவா. பறந்து போற குதிரைவரும். குகை வரும். குகைக்குள்ள புதையல் இருக்கும். ஏழு கடல் வரும். ஏழு மலை வரும். அப்டி இப்டினு கதை சூப்பரா இருக்கும்.
அந்த மாதிரி கதைகள் சொல்ல இன்னைக்கு உங்க வீட்ல தாத்தா, பாட்டிங்க இருக்காங்களா? இல்லைனாலும் பரவாயில்ல. அதுக்குத்தான் இப்ப நிறைய கதைப் புத்தகங்கள் இருக்கே. அதுல ஒண்ணுதான் இந்த ‘வாத்து ராஜா’.
இந்த ‘வாத்து ராஜா’ கதைல உங்கள மாதிரி ரெண்டு சுட்டித்தனமான குட்டீஸ் வராங்க. அந்த குட்டீஸ்ங்க பேரு அமுதா, கீர்த்தனா. பின்ன ஒரு வால் பையனும் உண்டு. அவன் பேரு ராமு. இவுங்க மூணு பேரும் உங்கள மாதிரி ஒரு ஸ்கூல்ல படிக்கிற பசங்கதான். சரி அப்போ, ராஜா எங்கேன்னு கேட்குறீங்களா? அவரும் வருவார். பொறுங்க சொல்றேன்.
இந்த அமுதாவும், கீர்த்தனாவும் ஒரு நாள் ஸ்கூலுக்கு வெளியில இருந்தப்போ ஒரு வித்தியாசமான குரல் இவுங்க ரெண்டு பேரையும் கூப்பிடுது. அது ஒரு அணில் குட்டி. நீங்ககூட நாய்க்குட்டி கிட்ட, செடிங்க கிட்ட எல்லாம் பேசியிருப்பீங்க இல்லையா? ஆனால் நாய்க்குட்டி திருப்பிப் பேசாது. ஆனால் இந்த அணில் நிஜமாவே நம்மள மாதிரி பேசுச்சு. அது என்ன பேசுச்சுன்னா, அமுதா கிட்டயும் கீர்த்தனா கிட்டயும் ஒரு கதை சொல்லக் கேட்டுச்சு. அந்தக் கதைதான், ‘வாத்து ராஜா’.
சரி, அது என்ன கதைன்னு கேட்குறீங்களா? புத்தகம் வாங்கிப் படிச்சுப் பாருங்க.
- வாத்து ராஜா,
விஷ்ணுபுரம் சரவணன்,
பாரதி புத்தகாலயம் வெளியீடு, சென்னை.
விலை ரூ.50, தொலைபேசி: 044 2433 2424
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT