Published : 19 Mar 2019 06:14 PM
Last Updated : 19 Mar 2019 06:14 PM
பியூரெட்டுக்கு இந்த வாரம் பரீட்சைங்கிறதால, நாங்க ரெண்டு பேரும் சந்திச்சுக்கல. அதுனால ஒரு புத்தகத்துல நான் படிச்ச வேதியியல் தனிமங்களப் பத்தின சுவாரசியமான துணுக்குகளை உங்களோட பகிர்ந்துக்கறேன்
– பிப்பெட்
1. தனிம வரிசை அட்டவணையில் முதலிடத்தில் உள்ள தனிமம் ஹைட்ரஜன். அதில் ஒரே ஓர் அணு மட்டுமே இருப்பதால், அது முதலிடத்தைப் பிடித்தது. ஹைட்ரஜன் மிகவும் அடர்த்தி குறைந்த தனிமமும்கூட.
2. தனிம வரிசை அட்டவணையில் இல்லாத ஒரே ஓர் ஆங்கில எழுத்து J.
3. தனிம வரிசை அட்டவணையில் உள்ள மொத்த வாயுக்கள் 11 (ஹைட்ரஜன், ஹீலியம், நைட்ரஜன், ஆக்சிஜன், புளூரின், குளோரின், நியான், ஆர்கான், கிரிப்டான், ஸெனான், ரேடான்).
4. தனிம வரிசை அட்டவணையில் உள்ள திரவத் தனிமங்கள் 6 (காலியம், புரோமின், சீசியம், பாதரசம், ஃபிரான்சியம், ரூபிடியம்).
5. தனிம வரிசை அட்டவணையில் உள்ள திடத் தனிமங்கள் 89.
6. கலிஃபோர்னியம் என்ற தனிமம்தான் உலகிலேயே மிக அதிக விலை கொண்டது. ஒரு கிராம் விலை ரூ. 35,000 கோடி.
7. அஸ்டாடைன் என்ற தனிமம்தான் பூமியில் மிகவும் அரிதானது. பூமியின் மேற்பரப்பில் இது வெறும் 28 கிராம் மட்டுமே இருக்கிறது. அதேநேரம், மிக அரிய உலோகம் ரோடியம் (Rhodium).
8. பிரபஞ்சத்தில் மிகவும் அதிகமாக உள்ள தனிமம் ஹைட்ரஜன், அதாவது 75 சதவீதம்.
9. பூமியின் மேல்ஓட்டில் அதிகமுள்ள தனிமம் ஆக்சிஜன். இது தண்ணீரிலும், வளிமண்டலத்திலுமாக மொத்தம் 49.5 சதவீதம் உள்ளது.
10. பூமியின் மேல்ஓட்டில் அதிக அளவில் உள்ள உலோகம் அலுமினியம், 8 சதவீதம்.
11. கிராஃபைட், வைரம், நிலக்கரி எனப் பல்வேறு வடிவங்கள் கொண்டது கார்பன் என்கிற கரி.
12. தண்ணீரின் அறிவியல் பெயர் டைஹைட்ரஜன் மோனாக்சைடு (H20).
13. மிகவும் தூய்மையான தங்கம் என்பது மிக மிக மிருதுவானது. அதை வெறும் கைகளிலேயே உருமாற்றி விடலாம்.
14. அறை வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும் ஒரே தனிமம், பாதரசம்.
15. ஹீலியம் மட்டும்தான் எந்த நிலையிலும் திடமாக மாறுவதில்லை. வாயுவாகவே இருக்கிறது.
16. இயற்கையாகக் கிடைக்கும் கனமான தனிமம் யுரேனியம்
17. மிகவும் நிலையான தனிமம் டெல்லூரியம்.
18. மிகப் பெரிய அணு ஆரம்கொண்ட தனிமம் சீசியம் (298 பி.எம்.).
19. சிறிய அணு ஆரம் கொண்ட தனிமம் ஹீலியம் (31 பி.எம்.).
20. அதிகக் கொதிநிலை கொண்ட உலோகம் பாதரசம்.
21. அதிகக் கொதிநிலை, உருகும் நிலை கொண்ட உலோகமல்லாத தனிமம் ஹீலியம்.
22. அதிக வேதிவினை புரியும் திடத் தனிமம் லித்தியம்.
23. அதிக வேதிவினை புரியும் திரவத் தனிமம் சீசியம்.
24. அதிக வேதிவினை புரியும் வாயு ஃபுளூரின்.
25. காலியம் என்ற உலோகம் மிகக் குறைந்த உருகும் நிலையைக் கொண்டிருப்பதால் (29.76 டிகிரி செல்சியஸ்), கைகளில் வைத்தாலே உருகிவிடும்.
26. மிக அதிக உருகுநிலை கொண்ட தனிமம் டங்க்ஸ்டன் - 3410 டிகிரி செல்சியஸ்.
27. அதிக உருகுநிலை கொண்ட உலோகமல்லாத தனிமம் கார்பன். அதிக கடத்தும் திறன் கொண்ட உலோகமல்லாத தனிமமும் கார்பன்தான்.
28. அதிகக் கடத்தும் திறன் கொண்ட உலோகம் வெள்ளி.
29. அறை வெப்பநிலையில் அடர்த்தியான தனிமம் ஆஸ்மியம்.
30. அறை வெப்பநிலையில் அடர்த்தி குறைந்த திடத் தனிமம் லித்தியம்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT