Last Updated : 06 Aug, 2014 09:20 AM

 

Published : 06 Aug 2014 09:20 AM
Last Updated : 06 Aug 2014 09:20 AM

நாக்கின் நிறம் மாற்றும் பழம்

அவ்வை பாட்டிக்கு முருகக் கடவுள் கொடுத்த பழம் வந்துருக்கேன். என்னை யாருன்னு கண்டுபிடிச்சீட்டிங்களா? அதாங்க, நாவல் பழம்தான் உங்கக் கிட்ட பேச வந்துருக்கேன். வருஷ முழுசும் நீங்க என்னைப் பார்க்க முடியாதில்லையா? ஜூன் மாசத்துல தொடங்கி அக்டோபர் வரைக்கும்தான் நீங்க என்னைப் பார்க்க முடியும். அதான், இந்த மாசத்துலேயே உங்கள பார்க்க வந்துட்டேன். சரி, என்னைப் பத்தி கொஞ்சம் சொல்றேன்.

குடும்பம்: நான் ‘மிர்தாசியே’ன்னு சொல்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஆளு. இது பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்தது.

பிறப்பிடம்: வெப்ப மண்டலப் பகுதிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா, இங்கெல்லாம் நான் ரொம்ப நல்லா வளருவேன். நானு இந்தியாவுலதான் பிறந்தேன். இங்கிருந்துதான் மத்த கண்டங்களுக்குப் போனேன்.

புனை பெயர்கள்: இங்கிலீஷ்ல ஜாமூன், ஜாம்போலன், கலா ஜாமூன், ஜமாலி, ஜாவா பிளம், கறுப்பு பிளம், கறுப்பு பெர்ரின்னு என்னைப் பல பேருல கூப்பிடுற மாதிரித் தமிழ்லயும் நிறையப் பேரு இருக்கு. அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல்ன்னு தூய தமிழ் பேர்கள்ல கூப்பிடுறாங்க.

பருவம்: வெயில் காலமான ஏப்ரல், மே மாசத்துலதான் பூ விடுவேன். அப்புறம் காயாகி ஜூன் மாசக் கடைசியில பழ உருவத்துக்கு வந்துடுவேன். அப்போ இருந்து செப்டம்பர் வரைக்கும் பழமாக உங்கக்கிட்ட இருப்பேன்.

அதிகம் விளையும் இடம்: சீனா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகள்ல என்னை நிறைய வளர்க்குறாங்க.

என்னென்ன சத்து: நீர்ச் சத்து, நார்ச் சத்து, கார்போ ஹைட்ரேட், கொழுப்புச் சக்தி, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச் சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், கால்சியம் சத்துகள்ன்னு நிறைய என்கிட்ட இருக்கு.

முக்கிய மருத்துவக் குணம்: ரத்தத்தைச் சுத்தப்படுத்துற சக்தி என்கிட்ட இருக்கு. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துற சக்தி எனக்கு இருக்கிறனல சமீப காலமா நிறையப் பேரு என்னை விரும்பி சாப்பிடுறாங்க. எனக்குள்ள இருக்குற கொட்டையைத் தூளாக்கிச் சாப்பிடுறாங்க.

குழந்தைகளுக்கு: புரதம், கால்சியம், வைட்டமின்கள் நிறைய இருக்குறதால குழந்தைகளும் என்னை சாப்பிடலாம்.

என்னைச் சாப்பிட்டா நாக்கு ஊதா நிறத்துக்குக் கொஞ்ச நேரம் மாறும்கிறதால, என்னைச் சாப்பிடாம விட்டுறாதீங்க. அப்போ நான் வரேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x