Published : 10 Oct 2018 11:05 AM
Last Updated : 10 Oct 2018 11:05 AM
கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1 தென் அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு. கரிபியன் கரையில் அமைந்திருக்கிறது.
2 ஆரம்பத்தில் டச்சு குடியேற்ற நாடாக இருந்தது. பின்னர் பிரிட்டனின் ஆதிக்கத்தில் 150 ஆண்டுகள் இருந்தது.
3 1966-ம் ஆண்டு விடுதலை அடைந்தது.
4 ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ள ஒரே தென் அமெரிக்க நாடு இதுதான்.
5 இந்த நாட்டின் தலைநகரம் ஜார்ஜ்டவுன்.
6 251 அடி உயரத்திலிருந்து விழும் கைட்டர் அருவி (Kaieteur Falls), உலகிலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
7 இந்த நாட்டில் 4 பெரிய நதிகள் பாய்கின்றன. 60% காடுகளால் ஆனது.
8 பாக்சைட், தங்கம், வைரம், மரம், மீன் போன்றவை இங்கே அதிகம் கிடைக்கின்றன.
9 கிரிக்கெட் வீரர் கார்ல் ஹூப்பர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
10 தென் அமெரிக்காவைச் சேர்ந்த சிறுத்தை (Jaguar) தேசிய விலங்காகவும் தேசியச் சின்னமாகவும் இருக்கிறது.
விடை: கயானா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT