Last Updated : 28 Aug, 2018 06:27 PM

 

Published : 28 Aug 2018 06:27 PM
Last Updated : 28 Aug 2018 06:27 PM

இது எந்த நாடு? 76: வாஸ்கோட காமாவின் நாடு

கீழே உள்ள குறிப்புகளை வைத்து, அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. தென்மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு. உலகிலேயே மிகப் பழமையான நாடுகளில் இதுவும் ஒன்று.

2. இதன் தலைநகரம் லிஸ்பன். இதுவே மிகப் பெரிய நகரம்.

3. முன்னேறிய பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமும் கொண்ட நாடு.

4. உலக அளவில் அமைதியான நாடுகள் பட்டியலில்  நான்காவது இடம் பிடித்த நாடு. பத்திரிகைச் சுதந்திரம் இங்கே அதிகம்.

5. இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பிய கடல் பயணியான வாஸ்கோட காமா, இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

6. ஐரோப்பாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று கோயிம்ப்ரா (Coimbra).

7. தக்கை மரத்தின் தாயகம் இது. மென்மையான இந்த மரத்தின் மூலம் ஏராளமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தக்கை மரப் பொருட்களை உலகில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இதுதான்.

8. லிஸ்பனில் டாகஸ் நதி மீது 17.2 கி.மீ. தூரத்துக்குச் செல்லும்  வாஸ்கோட காமா பாலம், ஐரோப்பாவின் மிக நீளமான பாலம்.

9. சேவல் (Rooster of Barcelo) இந்த நாட்டின் தேசியச் சின்னம்.

10. உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

விடை: போர்ச்சுக்கல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x