Published : 02 May 2018 11:52 AM
Last Updated : 02 May 2018 11:52 AM
உ
லகம் முழுவதுமுள்ள சிறுவர்களும் பெரியவர்களும் விரும்பி விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு என்றால் அது டான்கிராம்தான்! ஒரு சதுரத்தில் 5 முக்கோணங்களும் ஒரு சதுரமும் ஒரு சாய் செவ்வகமும் கிடைக்குமாறு வெட்டப்பட்ட துண்டுகள்தான் டான்கிராம். இந்த 7 துண்டுகளை வைத்து, உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு விதவிதமான உருவங்களை உருவாக்கி மகிழுங்கள். இந்த விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருக்கும். உங்களின் கற்பனை வளத்தை அதிகரிக்கும். சிந்தனையைத் தூண்டும். மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
எப்படி விளையாடுவது?
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சதுரத்தில் இருக்கும் துண்டுகளைக் கவனமாக வெட்டி எடுங்கள். தடிமனான அட்டையில் ஒட்டிக்கொள்ளுங்கள். மாதிரி உருவங்கள் சில கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் இதைப் பார்த்து செய்து பாருங்கள். பிறகு நீங்களே உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு உருவங்களை உருவாக்கி மகிழுங்கள். நீங்கள் எந்த உருவத்தை உருவாக்கினாலும் அதில் 7 துண்டுகளும் இடம்பெற வேண்டும். நண்பர்களுடன் போட்டி வைத்து, நேரம் நிர்ணயித்துக்கொண்டு உருவங்களை உருவாக்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள் யார், எத்தனை உருவங்களை உருவாக்குகிறார்களோ அவரே வெற்றி பெற்றவர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT