Published : 08 Nov 2023 06:03 AM
Last Updated : 08 Nov 2023 06:03 AM
மின்மினிப் பூச்சியின் உடலில் வெளிச்சம் வருவது எப்படி, டிங்கு? - ர. தக்ஷணா, 5-ம் வகுப்பு, தீக்ஷா வித்யா மந்திர், ஆனைமலை.
இந்த மழைக் காலத்தில் ஆனைமலையில் மின்மினிப் பூச்சிகள் அதிகம் காணப் படுகின்றனவா, தக்ஷணா! மின்மினிப் பூச்சிகள் தங்களின் உடலுக்குள் வேதிப்பொருளை உருவாக்கி, ஒளியை உமிழச் செய்கின்றன. இந்த வகை ஒளியை bioluminescence என்று அழைக்கிறார்கள். ஆக்சிஜன், கால்சியம், அடினோசின் டிரைபாஸ்பேட் (ATP), லூசிஃபெரின் என்கிற வேதிப்பொருளான லூசிஃபெரேஸ், பயோலுமினசென்ட் என்சைம் ஆகியவற்றுடன் இணைந்து ஒளி உற்பத்தி செய்யப்படுகிறது. மின்மினிப்பூச்சிகளின் ஒளி வெப்பத்தை வெளியிடாது. குளிர்ந்த ஒளியை வெளியிடுகிறது. ஒளிரும் உறுப்புகளுக்கு எவ்வளவு ஆக்சிஜன் செல்கிறது என்பதைப் பொறுத்து வெளிச்சம் வரும்.
விலங்குகளுக்கும் ஆசை இருக்கிறதா, டிங்கு? - க. அஷ்வின் கார்த்திக், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
மனிதர்களாகிய நமக்கு இருக்கும் ஆசைகளோடு விலங்குகளின் ஆசைகளைப் பொருத்திப் பார்க்கக் கூடாது. விலங்குகளும் ஆசையாகத் தங்கள் குட்டிகளை வருடிக் கொடுக்கின்றன, அரவணைத்துக்கொள்கின்றன. குட்டிகளோடு ஆசையாக விளையாடுகின்றன. நம்மைப் போல் ‘ஒருநாள் சோளாபூரி சாப்பிட வேண்டும்’, ‘நமக்குப் பிடிக்காதவர்களுக்குக் கெடுதல் நடக்க வேண்டும்’ என்றெல்லாம் அவை ஆசைப்படுவதில்லை.
வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் விருப்பமான உணவைக் கொடுத்தால் ஆசையாகச் சாப்பிடுகின்றன. மனிதர்கள் தங்களைக் கவனிக்க வேண்டும், அன்பு செலுத்த வேண்டும், வருடிக் கொடுக்க வேண்டும், பாதுகாப்பான இடம் வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுதுண்டு, அஷ்வின் கார்த்திக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT