Published : 25 Jul 2014 01:32 PM
Last Updated : 25 Jul 2014 01:32 PM
பாதித்த புத்தகம்:
இன்காக்னிட்டோ, டேவிட் ஈகிள்மேன் (Incognito David Eagleman). இந்தப் புத்தகம் வாழ்க்கை மற்றும் மனித மூளையின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியது. ஒவ்வொரு குற்றவியல், தாறுமாறான, சமூக விரோத நடத்தைக்கும் மரபணு பிறழ்சிகளும் மனித மூளையின் வித்தியாசமான கூறுகள்தான் காரணம் என்று சொல்கிறது. எனது உலகப் பார்வையை முற்றிலும் மாற்றிய புத்தகம் இது.
பிடித்த படம்:
பைசென்டினியல் மேன் (Bicentennial Man). ஐசக் அஸிமோவின் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். அழிவேயில்லாத ரோபோ ஒன்று மனிதனாக ஆசைப்பட்டு கடைசியில் மனிதனாக இறப்பதுதான் கதை. இந்தப் படத்தை வைத்துதான் ‘எந்திரன்’ படத்தில் ரோபோக்களை வடிவமைத்திருந்தார்கள்.
கனவுப் பயணம்:
இரண்டு காரணங்களுக்காக சுவிட்சர்லாந்து செல்ல ஆசைப்படுகிறேன். ஒன்று பனி, மற்றொன்று செர்ன் நிறுவனம். ஒரு இயற்பியல் ஆராய்ச்சியாளராக செர்ன் நிறுவனத்தைப் பார்வையிட வேண்டும் என்பது என் சிறுவயது கனவு. அறிவியல், இயற்கை இரண்டையும் விரும்புபவர்களுக்கு ஏற்ற நாடு இது.
இசை ஆல்பம்:
பீட்டில்ஸ் (Beatles)
ஹேங்க் அவுட் ஸ்பாட்:
பெஸ்ஸி@பெசன்ட் நகர் பீச். நண்பர்களை பீச்சில் சந்திப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைப்பதில்லை. ஒரு ஃப்ரீ அட்வைஸ் - பெஸ்ஸியை சூரிய உதயத்திற்கு முன் சென்று ஒரு முறை பாருங்கள். சென்னை இப்போதும் அழகாகத்தான் இருக்கிறது என்று ஒத்துக்கொள்வீர்கள்.
சிபி, இரண்டாம் ஆண்டு, பி.எஸ்சி. லயோலா கல்லூரி.
---------------------------------------------------------------
‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT