Published : 12 Feb 2016 12:56 PM
Last Updated : 12 Feb 2016 12:56 PM
‘வேலன்டைன்ஸ் டே ஃபீவர்' அறிகுறிகள் இவை. மிகச் சரியாக ஒரு வாரத்துக்கு முன்னால் இந்த அறிகுறிகள் காதலர்களைத் தாக்கும் அபாயம் உள்ளவை. இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி உங்களுக்கு இருந்தால் ‘விஷ் யூ லவ்வர்ஸ்!'
காதலர் வாரத்தின் முதல் நாளாக ‘ரோஜா தினம்' பிப்ரவரி 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. காதல் துணைக்குப் பல்வேறு விலை உயர்ந்த பொருட்களைப் பரிசாகக் கொடுத்தாலும் ஒரு ரோஜா மலருக்கு இணையாகாது. இதற்கு இணை வேறு இல்லை!
பிப்ரவரி 8-ம் தேதி ‘பிரபோஸ் டே'. காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தும் தினம். தங்களுடைய 'வேலன்டைனை' மகிழ்ச்சியூட்டும் விதமாகவும் ஆச்சரியப் படுத்தும் வகையிலும் தங்களது காதலை வெளிப் படுத்துவதற்காகக் கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 9-ம் தேதி ‘சாக்லெட் டே'. காதலன் காதலிக்கோ அல்லது காதலி காதலனுக்கோ விதவிதமான வடிவத்தில் உள்ள சாக்லெட்டுகளை வழங்கி அன்பை வெளிப்படுத்தும் தினம்.
பிப்ரவரி 10-ம் தேதி ‘டெடி டே'. முக்கியமாகப் பெண்களுக்காகவே கொண்டாடப்படும் தினம். பெண்களுக்கு ‘டெடி' பொம்மைகள் பிடிக்கும் என்பதால் ஆண்கள் தன் காதலிக்கு அழகிய காதல் சின்னம் பதித்த டெடியைப் பரிசாக வழங்கி மகிழ வைத்து, மகிழ்வர்.
பிப்ரவரி 11-ம் தேதி ‘பிராமிஸ் டே'. இந்த நாளன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கையூட்டும் வகையில் ‘கடைசி வரை உன்னுடன் இருப்பேன்' என்று சத்தியம் செய்து கொடுப்பர். இதனால் ஒருவர் மீது மற்றொருவருக்கு அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
பிப்ரவரி 12-ம் தேதி ‘ஹக் டே'. இந்த தினத்தன்று காதலனும் காதலியும் அல்லது நண்பர்கள் நண்பர்களையும் கட்டிப்பிடித்து தங்களது அன்பை வெளிப்படுத்தும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ‘நான் உன் மீது முழு அன்பும், அக்கறையும் கொண்டுள்ளேன்' என்பதை உணர்த்துவதற்காக இந்த ‘ஹக்'காம்!
பிப்ரவரி 13-ம் தேதி ‘கிஸ் டே'. காதலர் வாரத்தின் ஏழாம் நாள் முத்தத்தின் வாயிலாக அன்பைப் பரிமாறிக்கொள்ளும் தினம். காதலர்கள் தங்களுக்குக் கிடைத்த உன்னதமான தினமாகக் கருதி அந்த தினத்தை ‘ரொமாண்டிக்'காக கொண்டாடுகிறார்களாம். ‘முத்தத்தைவிட சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை' என்ற நா.முத்துக்குமாரின் வரிகள் ஞாபகமிருக்கிறதுதானே?
பிப்ரவரி 14-ம் தேதி ‘வேலன்டைன்ஸ் டே'. இறுதியாகப் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கும் காதலர்களுக்காகவே கொண்டாடப்படும் தினம். இத்தினத்தில் காதலிக்கும் ஒவ்வொருவரும் வாழ்த்து தெரிவித்து பரிசுப் பொருட்களைக் கொடுத்து, அந்த நாளைச் செலவழிப்பார்கள். சாதி, மத, இன வேறுபாடின்றி உருவாகும் காதலுக்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT