Published : 12 Feb 2016 12:58 PM
Last Updated : 12 Feb 2016 12:58 PM
வந்தாச்சு ‘காதலர் தினம்'. இன்னும் ஃபேஸ்புக், ட்விட்டர், ‘வாட்ஸ் அப்'னு ‘லவ் ஸ்டேட்டஸ்' போடுறதை விட்டுட்டு கொஞ்சம் வித்தியாசமா ட்ரஸ் போடுறதால மத்தவங்களுக்கு ‘சிக்னல்' கொடுங்க. காலேஜ், ஆஃபீஸ்னு போற இடங்கள்ல நீங்க ‘ட்ரஸ் கோட்'டை ஃபாலோ பண்றீங்களோ இல்லையோ, மறக்காம இந்த நாள்ல இந்த ட்ரஸ் கோடை ஃபாலோ பண்ணுங்கப்பா...
ஆரஞ்சு கலர்: புரொப்போஸ் பண்ண வெயிட்டிங்.
காதலர் தினத்தன்னிக்கு ஆரஞ்சு கலர் டிரஸ் போட்டீங்கன்னா நீங்க யாரையோ ‘புரொப்போஸ்' பண்ண போறிங்கன்னு அர்த்தம்.
ரெட் கலர்: டபுள் சைடு லவ்
நீங்க 'டபுள் சைடு லவ்' பண்றவங்கன்னா உங்க சேஃப்டிக்கு ரெட் கலர் ட்ரஸ் போட்டுக்குங்க. அப்ப யாரும் லவ் ப்ரொப்போஸ் பண்ணமாட்டாங்க. நிம்மதியா நடமாடலாம்.
நீல கலர்: நான் இப்போ ‘ஃப்ரீ'. ‘
அப்ளிகேஷன்ஸ் இன்வைடட்'! நீங்க ‘கமிட்டட்' இல்லன்னா நீல கலர் டிரஸ் போட்டா யூஸ்ஃபுல்லா இருக்கும். அப்படி போட்டா நீங்க லவ் பண்ண ரெடின்னு அர்த்தம். இதனால உங்ககிட்ட நிறைய பேர் ‘அப்ளிகேஷன்' போட வாய்ப்பிருக்கு.
மஞ்சள் கலர்: லவ் ‘ப்ரேக் அப்!'
லவ் பிரேக் அப் ஆனவங்க மஞ்சள் கலர் ட்ரஸ் போட்டுக்கலாம். அதைப் பார்த்து உங்களுக்கு ப்ரேக் அப் ஆச்சுனு எல்லாருக்கும் தெரியும். அப்ப உங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. இதைப் பார்த்து நிறைய பொண்ணுங்க உங்களுக்கு ஆறுதல் சொல்ல வரலாம். அதில் ஏதாவது ஒன்னு ‘க்ளிக்' ஆகலாம்!
கருப்பு கலர்: பிரொப்போஸல் ரிஜெக்டட்!
‘லவ்வர்ஸ் டே' அன்னிக்கி நீங்க கருப்பு கலர் ட்ரஸ் போட்டீங் கன்னா உங்களை புரொப்போஸ் பண்ண வர்றவங்களை ரிஜெக்ட் பண்றதா அர்த்தம். யாரு கண்டா... ‘ஐயோ... பாவம். யாரோ இவரின் லவ்வை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க'ன்னு பரிதாபப்பட்டு வேற யாராவது உங்ககிட்ட லவ் புரொபோஸ் பண்ணக்கூட சான்ஸ் இருக்கு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT