Last Updated : 19 Feb, 2016 12:07 PM

Published : 19 Feb 2016 12:07 PM
Last Updated : 19 Feb 2016 12:07 PM

வீடியோ புதிது: நேர்காணல் வழிகாட்டி

வேலைவாய்ப்புக்கான நேர்காணலின்போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை எனப் பெரிய பட்டியலே இருக்கிறது. இவற்றில் சிலவற்றை நீங்களும் கூட அறிந்திருக்கலாம். இந்தப் பட்டியலில் கைகளுக்கான பிரத்யேக குறிப்புகள் இருப்பது தெரியுமா?

அதாவது நேர்காணலின்போது கைகளை எப்படி வைத்திருக்க வேண்டும், எப்படி எல்லாம் வைத்திருக்கக் கூடாது என்பதற்குத் தெளிவான விதிகள் இருக்கின்றன.

உதாரணத்திற்கு மேஜை மீது கைகளைத் தாளமிட்ட படி இருப்பதையும், உள்ளங்கை மறைந்திருக்கும் நிலையில் வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். முன்னது பதற்றத்தின் வெளிப்பாடாக அமையும் என்றால் இரண்டாவது சைகை ஒருவர் எதையோ மறைப்பதாக நினைக்க வைக்கும். அதே போல கைகளைக் கட்டியபடியும் இருக்கக் கூடாது. உள்ளங்கையை வெளிப்புறமாக வைத்திருக்கலாம். இது நம்பகத்தன்மையை உணர்த்தும். கைகளைக் கூப்புவது போல ஒன்றாகவும் வைத்திருக்கலாம்.

‘கிரேசி குட் இன்டர்வியூவிங்' எனும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குறிப்புகளை அருமையான வீடியோவாக ‘பிஸ்னஸ் இன்சைடர்' தளம் உருவாக்கியுள்ளது