Published : 06 Nov 2015 12:03 PM
Last Updated : 06 Nov 2015 12:03 PM
ஆரம்பித்துவிட்டது ‘சாரங் ஃபீவர்!'
இந்தியா முழுக்க உள்ள தொழில்நுட்ப மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் மாணவர் திருவிழாக்களில் முக்கியமானது சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் நடத்தும் ‘சாரங்!'.
அடுத்த ஆண்டு ஜனவரி மாத மத்தியில் தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடு நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. அந்த நிகழ்ச்சிகளில் ஒன்று, கடந்த வாரம் மாணவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
அது... ‘லெதர் மர்டர்!'
இது குறித்து இந்த நிகழ்ச்சியின் மாணவ அமைப்பாளர்களில் ஒருவரான அத்வைத் ஷங்கர் கூறும்போது, "எவ்வளவுதான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் இன்னமும் உலகம் முழுக்க விலங்குகளை அவற்றின் தோல் உள்ளிட்ட பாகங்களுக்காகக் கள்ள வேட்டையாடுவது தொடர்கிறது.
மக்கள் மத்தியிலும் அதற்கான தேவை இருப்பதால்தான் இன்று இந்த கள்ளவேட்டைச் சந்தை பெருகியிருக்கிறது. ஃபேஷன் என்ற பெயரில் விலங்குகளின் தோல்களைக் கொண்டு செய்யப்படும் சில பொருட்கள் முதலில் இளைஞர்களின் கவனத்தையே ஈர்க்கின்றன.
எனவே இளைஞர்களிடத்திலிருந்தே கள்ள வேட்டைக்கு எதிராகவும், விலங்குகளின் பாகங்களிலிருந்து செய்யப்பட்ட பொருள்களுக்கு எதிராகவும் ‘பீப்பிள் ஃபார் தி எதிக்கல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (பெடா)' அமைப்புடன் சேர்ந்து நாங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். இதில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, தங்களின் முகங்களில் வெவ்வேறு விலங்குகளின் உருவங்களை வரைந்துகொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மேலும் ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் மாணவர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்" என்றார்.
அந்த விலங்குகளின் உருவங்களைப் பூசிய முகங்கள் இங்கே...!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT