Published : 31 Jul 2015 02:47 PM
Last Updated : 31 Jul 2015 02:47 PM
இந்த அன்பான மஞ்சள் அனிமேஷன் கதாபாத்திரங்கள் இளைஞர்கள், வயதானவர்கள் என எல்லாத் தரப்பினரையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றன.
இந்தச் சின்னஞ்சிறு மஞ்சள் வண்ண உருண்டையான, கிறீச்சிடும் மினியான்ஸ், 2010-ல் ‘டெஸ்பிக்கபிள் மீ’ படத்தின் மூலம்தான் உலகுக்கு அறிமுகமாயின. சமீபத்தில் வெளியான ‘மினியான்ஸ்’ திரைப்படம் இந்தக் கதாபாத்திரங்களுக்குத் தனித்துவத்தையும், பிரம்மாண்டமான பிரபலத்தையும் கொடுத்திருக்கிறது.
ஆடைகள், சாக்ஸ், லிப் கிளாஸ், கார் ஸ்டிக்கர்கள், கீபோர்ட் டிகேல்ஸ், போன் கேஸஸ், லேப்டாப் ஸ்லீவ்ஸ், காபி மக்ஸ், பென் டிரைவ்ஸ், கேக்ஸ், பார்ட்டி தீம்கள் என எல்லாவற்றிலும் இப்போது ‘மினியான்ஸ்’ நிரம்பியிருக்கின்றன. ஆண்டின் நிறத்தைத் தீர்மானிக்கும் சர்வதேச நிறுவனமான பென்டோன், இந்த ஆண்டின் நிறமாக மினியான் மஞ்சளை வெளியிட்டிருக்கிறது.
‘நம்பிக்கை, மகிழ்ச்சி, நேர்மறைச் சிந்தனை’க்கான நிறம் மினியான் மஞ்சளென விளக்கியிருக்கிறது இந்நிறுவனம். அந்த அளவுக்கு மினியான்ஸ் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஒரு சினிமா கதாபாத்திரத்தின் பெயரில் ஒரு நிறத்தை பென்டோன் நிறுவனம் வெளியிடுவது இதுவே முதல்முறை. பேஷன் உலகிலும் இந்த மினியான் மஞ்சள் வேகமாகப் பரவிவருகிறது.
பொம்மைகள்
எக்ஸ்பிரஸ் அவென்யூவில் அமைந்திருக்கும் ‘ஹேம்லேஸ்’ கடையில் ஒரு மஞ்சள் கடலே உருவாகியிருக்கிறது. இந்தக் கடையின் ஒரு பெரிய பகுதியையே மினியான்ஸ் பொம்மைகள் ஆக்கிரமித்திருக்கின்றன. பல வகையான அளவுகளிலும், வித்தியாசமான இயக்க முறைகளையும் கொண்ட மினியான்ஸ் பொம்மைகள் சிறியவர்கள், பெரியவர்கள் என இரு தரப்பினரையும் கவர்ந்திருக்கின்றன. இந்தக் கடை, மினியான்ஸ் பொம்மைகளை எப்போதும் சேகரித்துவந்திருக்கிறது. கடந்த வாரம், படத்தின் வெளியீட்டின் போது புதுவகையான மினியான்ஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அதில் 36 விதமான பொம்மைகள் உடனடியாக விற்றுத் தீர்ந்திருக்கின்றன. மைக்ரோ மினியான்ஸ், சிறிய ஆக்ஷன் மினியான்ஸ், இசைக்கும் மினியான்ஸ் எனப் பலவிதமான மினியான்ஸ் பொம்மைகள் அங்கே கிடைக்கின்றன. “மினியான்ஸ் பொம்மைகளை வாங்கும் குழந்தைகளின் சதவீதத்தைவிடப் பெரியவர்களின் சதவீதம் அதிகம்.
பாப், ஸ்டுவார்ட் என்னும் இரண்டு மினியான் கதாபாத்திரங்கள் 25 வயதில் இருப்பவர்களிடம் பிரபலமாக இருக்கின்றன” என்று சொல்கிறார் ஹேம்லேஸ் கடையின் விற்பனை நிர்வாகி ஆண்டனி. சாஃப்ட்டான மினியான்ஸ் பொம்மைகளை விரும்புவர்கள் ‘இபே’, ‘அமேசான்’ போன்ற தளங்களில் வாங்கிக்கொள்ளலாம். பேட்ஜஸ், ஸ்கூல் பேக்ஸ், லஞ்ச் பேக்ஸ், கண்ணாடிகள், ஹேல்மட்கள் போன்ற பொருட்களிலும் மினியான்ஸ் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது.
ஆடைகள், ஆக்சசரீஸ்
மினியான்ஸ் திரைப்பட பிரிமியரில், ஹாலிவுட் பிரபலம் சாண்ட்ரா புல்லக் மினியான்ஸ் ஹீல்ஸ் அணிந்து ரெட் கார்ப்பெட்டில் நடந்துவந்தார். ரூபர்ட் சாண்ட்ர்சன் அதை வடிவமைத்திருந்தார். விருப்பப்பட்டால் selfridges.com என்ற இணையதளத்தில் மினியான்ஸ் ஷூக்களை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். வடிவமைப்பாளர்கள் கில்ஸ் டிகான், பியர்ஸ் அட்கின்ஸன், சாண்டர்சன் வடிவமைத்த இந்தப் பொருட்கள் ‘மினியான்ஸ்’ சிறப்பு ஸ்டோர்களிலும், இணையதளத்திலும் கிடைக்கின்றன. ‘பெல்லோ யெல்லோ கலெக்ஷன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதில் ஆடைகள், சில்க் ஆடைகள், சட்டைகள், டெனிம் சட்டைகள், டி-ஷர்ட்ஸ் போன்றவை இருக்கின்றன.
இதற்கான மேட்ச்சிங் காலணிகளை வடிவமைப்பாளர்களும் கலைஞர்களும் இணைந்து வடிவமைத்திருக்கிறார்கள். இந்த ‘மினியான்ஸ்’ ஷூக்களுக்காகத் தனியாக ஒரு பேஸ்புக் பக்கமே இயங்கிவருகிறது. fashionara.com என்னும் இணையதளத்தில் மினியான்ஸ் கருப்பொருளில் எல்லா வகையான பொருட்களும் கிடைக்கின்றன. அதேமாதிரி, >ultykhopdi.com என்னும் தளத்திலும் மினியான்ஸ் பிரியர்களுக்கான பொருட்கள் கிடைக்கின்றன.
பின்டிரஸ்ட்டில் போடப்பட்டிருக்கும் மினியான்ஸ் ‘நெயில் ஆர்ட்’ படங்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றன. மினியான்ஸ் ‘நெயில் ஆர்ட்’ சரியாகச் செய்வதற்கான செய்முறையும் யூட்யூபில் ஹிட்டாகிக்கொண்டிருக்கிறது. நேரமில்லாதவர்கள், எளிமையாக மினியான்ஸ் ‘நெயில் ஸ்டிக்கர்ஸை’ >aliexpress.com என்ற தளத்தில் ஆர்டர் செய்துகொள்ளலாம்.
பார்ட்டிகள்
பார்ட்டிகளில் உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. அதுவும், சில நேரங்களில் எல்லாருக்கும் பிடித்தமான முறையில் அதைக் கொண்டாட முடியும். மினியான்ஸ் எல்லாருக்கும் பிடித்ததாக இருப்பதால், இதையே உங்கள் பார்ட்டி தீம் ஆகத் தேர்ந்தெடுக்கலாம்.
லாயிட்ஸ் டீ ஹவுஸைச் சேர்ந்த வந்தனா மஹ்தானி, “எங்களுக்கு மினியான்ஸ் கேக்ஸ், கப் கேக்ஸ் செய்வதற்கான பதினாறு ஆர்டர்கள் கடந்த இரண்டு மாதங்களில் கிடைத்திருக்கின்றன” என்று சொல்கிறார். குக்கீஸ், மக்ரூன்ஸ், கேக் பாப்ஸ் எனப் பார்ட்டிகள் மினியான்ஸ் இல்லாமல் இப்போது முழுமையடைவதில்லை.
சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி ©தி இந்து (ஆங்கிலம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT