Last Updated : 22 May, 2015 03:32 PM

 

Published : 22 May 2015 03:32 PM
Last Updated : 22 May 2015 03:32 PM

இருக்கு... ஆனா இல்ல

இந்தியா ‘வல்லரசா’ஆகுறது இளைஞர்கள் கையில்தான் இருக்குதுன்னு சொல்றாங்க. ஏனெனில் இந்திய மக்கள்தொகையில் 28 சதவீதம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான். ஆனாலும் அவர்களின் பிரச்சினை பற்றி காதுகொடுக்க ஆட்கள் இல்லை என்ற வருத்தம் அவர்களுக்கு உள்ளது. அது சரி, இந்தக் கால இளைஞர்களின் தலையாய பிரச்சினை எது? அவர்களது வருத்தத்தைப் போக்கவும், அவர்களது பிரச்சினைகள் என்னவென்று கண்டுகொள்ளவும் நாமாவது முயல்வோமா? ப்ளஸ் 2 முடிச்சவங்கள்ல இருந்து கல்யாணத்துக்குப் பொண்ணு தேடிக்கிட்டு இருக்கிறவங்க வரைக்குமான இளைஞர்கள் பலரிடம் பேசியதிலிருந்து…

பையன்:

நானும் எங்க அத்தை பொண்ணும் இப்பதான் ப்ளஸ்-2 முடிச்சிருக்கோம். அவளோட பேரண்ட்ஸ், ‘பாப்பா நீ என்ன படிக்கணும்னு நினைக்கிறியோ அதைப் படி செல்லம்’னு சொல்லிட்டாங்க. ஆனா எங்க வீட்ல-? இந்த கோர்ஸ் படின்னு அப்பா ஒண்ணச் சொன்னா, அண்ணன் இன்னொன்னைச் சொல்றான். ‘இது அதைவிட பெட்டரா இருக்குமே’னு அப்பாவோட பிரண்ட் சொல்றாரு. இதுகூடப் பரவாயில்லீங்க. பக்கத்து வீட்டு மாமாவெல்லாம் அறிவுரை சொல்றாங்க. ‘நீ என்னடா கண்ணு படிக்க விரும்புற’ன்னு இதுவரைக்கும் யாரும் கேட்கலை. இந்த நாட்டுல பாலின சமத்துவமே இல்லீங்க சார்.

பொண்ணு:

தினமும் பத்து ஆக்ஸிடெண்ட் ஆனாக்கூட, பசங்க பைக் கேட்டா உடனே வாங்கிக் கொடுத்திடுறாங்க சார். எவ்வளவு பாதுகாப்பா ஓட்டுனாலும், நாங்க வண்டி கேட்டா மட்டும் என்னமோ ராக்கெட் கேட்ட மாதிரி லுக் விடுறாங்க. இப்படித்தான் எல்லா விஷயங்கள்லேயும் நடக்குது.

பையன்:

அம்மாவுக்கு ஐஸ் வெச்சி, அப்பாகிட்ட கெஞ்சி 200 சிசி பைக் வாங்குனேன். அது பெட்ரோலை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுது. வீட்ல இருந்து கிளம்பி மறுபடி வீடு திரும்புறதுக்குள்ள போட்ட பெட்ரோல் எல்லாம் காலியாகிடுது. எங்களோட அவஸ்தை புரியாம வாரத்துக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை ஏத்துறீங்களே? பாக்கெட் மணி பூராவும் பெட்ரோலுக்கே போயிட்டா, மிச்ச செலவுக்கு என்ன பண்றதாம்?

பொண்ணு:

‘இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டிருச்சி. சாமானியர்களின் கையிலும் 3 ஜி மொபைல் போன் இருக்குது’ன்னு பீத்திக்கிறீங்களே. தகவல் தொழில்நுட்பம் படிக்கிற பசங்க, பொண்ணுகளையே காலேஜூக்கு செல்போன் கொண்டு வரக் கூடாது, ஹாஸ்டலில் செல்போன் பயன்படுத்தக் கூடாதுன்னு டார்ச்சர் பண்றாங்க. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா சார்?

‘தம்பி படிக்கிறப்ப வர்ற காதல் எல்லாம் வெறும் இனக்கவர்ச்சிதான். படிச்சி முடிச்சி சொந்தமா நாலு காசு சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு காதல் பண்ணு. நாங்க அதுக்கு சப்போர்ட் பண்றோம்’னு பெருசுங்க சொன்னதை நம்பி அம்மாஞ்சியா இருந்திட்டேங்க. இன்னைக்குக் காதலிக்கிறதுக்கு ஒரு பொண்ணுகூடக் கிடைக்கலை. யாரைக் கேட்டாலும் ‘நான் ஏழாங்கிளாஸ்ல இருந்து லவ் பண்றேன். சாரி பிரதர்’னு சொல்லிடுறாங்க. கல்யாணம் கட்டிக்ககூடப் பொண்ணு கிடைக்காது போல. செல்வராகவன் படத்து ஹீரோ மாதிரி, லவ்வர்ஸுக்கு நடுவுல புகுந்து லவட்டுனாத்தான் உண்டு போல.

பையன்:

இன்னொரு பையன்:

அவராவது வேலைக்குப் போற அளவுக்கு வயசாகிடுச்சி சார். நான் ஸ்டூடண்ட். ஆனாலும் பார்க்கிற பொண்ணுங்க எல்லாம் ‘ஐ யம் கமிட்டட்’னு சொல்லுறாங்க. 90 சதவீதப் பெண்கள் கமிட்டடு என்றும், 10 சதவிகித பசங்க கமிட்டடு என்றும் சொல்கிறார்கள். அப்படின்னா மிச்ச 80 சதவீதப் பொண்ணுகளோட லவ்வர்னு சொல்லப்படுகிற பசங்க எல்லாம் எங்க இருக்காங்க-? செவ்வாய்கிரகத்துலேயா?

பையன்:

அட எங்களால நிம்மதியா சினிமாவுக்குக் கூடப் போக முடியலைங்க. பூராப் பயல்களும் ஆன்லைன்லயே டிக்கெட்டை புக் பண்ணிடுறான். என்னைய மாதிரி பசங்க திடீர்னு செட் சேர்ந்து படத்துக்குப் போனா ஹவுஸ்புல்ங்கிறாய்ங்க. அப்படியே டிக்கெட் கிடைச்சாலும், கார்னர் சீட் கேட்கிறவனுக்கு சென்டர் சீட்டும், சென்டர் சீட் கேட்கிறவனுக்கு கார்னர் சீட்டும் கிடைக்குது. ஏன்யா எங்கள என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? ஒரு காலத்துல சென்னையில மட்டும் இருந்த இந்தப் பிரச்சினை இன்னைக்குத் திருநெல்வேலி வரைக்கும் வந்திடுச்சி.

பொண்ணு:

இந்தத் துயரமே வேணாம். ஈஸியா டிக்கெட் கிடைக்கிறப்ப படத்துக்குப் போகலாம்னு 4 நாள் வெயிட் பண்ணினா, அதுக்குள்ள அந்தப் படத்தைப் பற்றி பேஸ்புக், வாட்ஸ் ஆப் எல்லாத்துலையும் எழுதித் தள்ளிடுறாங்க. 5-வது நாள் ‘ஐ யம் வாட்சிங் உத்தம வில்லன்’னு ஸ்டேடஸ் போட்டா, என்னமோ பாச மலர்கள் படத்துக்குப் போனவளைக் கண்டது மாதிரி கலாய்க்கிறாய்ங்க.

பையன்:

இந்த நவநாகரிக உலகத்துலேயும் டிரஸ் கோடுன்னு வெச்சிக் கொடுமைப்படுத்துற காலேஜ் கொலைகொலையா இருக்குதுங்க. டி சர்ட் போடக் கூடாது, சட்டையை மடிச்சி விடக் கூடாது, கையில பேண்ட் போடக் கூடாது, லோ ஹிப் பேண்ட் போடக் கூடாதுன்னு சொல்றாங்க.

சரி, நெஞ்சு வரைக்கு பேண்ட் போட்டு, அதையும் இன் பண்ணிக்கிட்டுப் போக நாங்க தயார்ங்க. ஆனா, பொண்ணுங்களுக்கும் டிரஸ் கோடு கொண்டு வர்றீங்க பாருங்க. அதைத் தான் எங்களால பொறுத்துக்க முடியலை. ஜீன்ஸ், டிசர்ட் கூடாது, குர்தா கூடாதுன்னு பொண்ணுங்களைப் பார்த்து மட்டும் சொல்லாதீங்க பிளீஸ். அவங்க பாவாடை தாவணியில் வர ஆரம்பிச்சா நானெல்லாம் இந்த நாட்டைவிட்டுப் போறதைத் தவிர வேற வழியே இல்லை.

பையன்:

இப்பெல்லாம் ரோட்டுல பொண்ணுங்க பண்ற அலும்பு தாங்கலைங்க. கைக்கு க்ளவுஸ், முகத்துக்கு ஸ்கார்ப்புன்னு கட்டிக்கிறாங்க. முகத்தை மறைக்க கண்டுபிடிக்கப்பட்டது தானோன்னு நினைக்கிற அளவுக்குத் துப்பட்டாவை மாற்றிட்டாங்க. பிறகெப்படிங்க நாங்க சைட் அடிக்கிறது? தனி மனிதனுக்கு சைட் அடிக்க உரிமையில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் ஆமா.

பொண்ணு:

அதெல்லாம் விடுங்கங்க. கட்டாயம் ஓட்டுப்போட்டே ஆகணும்னு காலேஜ் காலேஜா வந்து சொல்றீங்கள்ல. போன தேர்தல்ல வோட்டிங் மிஸினைப் பார்த்தேன். எனக்குப் பிடிச்ச கேக் படமும், பலூன் படமும் இருந்துச்சி. ரொம்ப யோசிச்சு கேக்குக்கு வோட் போட்டேன். ‘அட லூசு சுயேச்சை வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டுட்டியேடீ’ன்னு பசங்க கிண்டல் பண்றாங்க. இதுவே திமுக, அதிமுகவுக்குப் போட்டாலும் அய்யே புதுசா ட்ரை பண்ணக் கூடாதான்னு சொல்லுவாய்ங்க. வர்ற தேர்தலுக்குள்ளாவது இளைஞர்களுக்குன்னு ஒரு கட்சி வராதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x