Published : 29 May 2015 07:21 PM
Last Updated : 29 May 2015 07:21 PM
என் பெயர் ராகுல். நான் கத்தார் தலைநகர் தோஹாவில், தனியார் நிறுவனம் ஒன்றில் இணைப் பொறியாளராக இருக்கிறேன். ‘சன்டே’ எனக்கு எப்போதுமே ஸ்பெஷலான நாளாகவே இருந்திருக்கிறது. ஆனால், இங்கே என் ‘சன்டே’ நகர்வதற்கும், இந்தியாவில் நான் ‘சன்டே’வைக் கொண்டாடியதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
நான் கத்தார் வருவதற்கு முன் பெங்களூருவில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது என் வீக் எண்ட் முழுவதும் நண்பர்களுடன்தான் கழியும். சன்டேவில் மதிய உணவை ரெஸ்டாரெண்ட்டில் முடித்துவிட்டு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ‘லாங் டிரைவ்’ செல்வோம். வாரம் முழுவதும் வேலைபார்த்த கடுமையை ‘சன்டே’ தணித்துவிடும். அதுவும் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்களுக்கு, ‘சன்டே’தான் மறுபடியும் எங்களைப் புதுப்பித்துக்கொள்வதற்கான ஒரே நாள்.
ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறாக தோஹாவில் எனக்கு ஒரு வீக் எண்ட் அமைந்தது. ஏனென்றால், தோஹாவில் வெள்ளியும், சனியும்தான் வீக் எண்ட் நாட்கள். அங்கே ஞாயிற்றுக்கிழமையில் இருந்துதான் வேலை செய்யத் தொடங்குவோம். அது வியாழன்வரை தொடரும். இந்த கத்தார் ‘வீக்எண்ட்’ வழக்கத்தை ஏற்றுக்கொள்வதற்கு எனக்குச் சில ஆண்டுகள் தேவைப்பட்டன.
‘சன்டே’ என்றாலே ஓய்வு, ஃபன் என்று இருந்துவிட்டு, இங்கே ‘சன்டே’வில் வேலைபார்ப்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருந்தது. ஆனால், எப்படியோ இங்கே இருக்கும் வீக் எண்ட்டுக்கு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தயார்படுத்திக் கொண்டேன். போட்டோகிராபி என்னுடைய ‘ஹாபி’. அதை இங்கே வந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியான பல அனுபங்களைக் கொடுத்திருக்கிறது.
வீக் எண்ட் காலையில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ‘போட்டோ’ எடுக்கக் கிளம்பிவிடுவோம். மதியம் திரும்பி வந்து நாங்களே சுவையாகச் சமைத்துச் சாப்பிடுவோம். தமிழ்ப் படங்கள் வெளியானால் மாலையில் தியேட்டருக்கு நண்பர்கள் அனைவரும் ஒன்றாகச் சென்று பார்ப்போம். இரவு வெளியே சாப்பிட்டுவிட்டு அறைக்குத் திரும்பிவிடுவோம். அந்த வகையில் இங்கேயும் என் வீக் எண்ட் ஓரளவு ஜாலியாகவே கழிகிறது. ஆனால், நான் சென்னைக்கு வரும்போது என் அம்மாவுடன் கழியும் ‘சன்டே’தான் இப்போதைக்கு எனக்கு ஸ்பெஷல். நான் வந்திருப்பதால் அம்மா பல விதவிதமான உணவுகளைச் சமைத்து அடுக்கிவைத்துவிடுவார். அன்று முழுக்க அம்மா கையால் சமைத்த உணவுகளை ருசித்துவிட்டு ஜாலியாக ஓய்வெடுக்கலாம்.
இப்படி மூன்று விதமான சுவாரஸ்யமான வீக்எண்ட் அனுபவங்கள் எனக்கு இருக்கின்றன.
‘இது என் வீக்எண்ட்’ பகுதியில் நீங்களும் உங்கள் வீக்எண்ட் அனுபவங்களை ஜாலியாகப் பகிர்ந்துகொள்ளலாம். உங்கள் வீக்எண்ட் கொண்டாட்டங்களை ‘இளமை புதுமை’ வரவேற்கிறது. உங்களைப் பற்றிய விவரங்களுடன் புகைப்படத்தையும் இணைத்து அனுப்புங்கள். வயது வரம்பு: 16 - 30.
தொடர்புக்கு: ilamaiputhumai@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு: இளமை புதுமை,
தி இந்து, கஸ்தூரி மையம், 124,
வாலாஜா சாலை, சென்னை - 600002.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT