Last Updated : 03 Apr, 2015 02:55 PM

 

Published : 03 Apr 2015 02:55 PM
Last Updated : 03 Apr 2015 02:55 PM

நானும் யூத் தாம்பா...

நேரம்’ படத்தில் கம்ப்யூட்டர் நிறுவன அதிபரான நாசர், தன்னுடைய தம்பியைக் காப்பாற்றிய ஹீரோ நவீனிடம் ஒரு கேள்வி கேட்பார்.

“கம்ப்யூட்டர்ல என்னெல்லாம் தெரியும் உங்களுக்கு?”

“சி, சி பிளஸ் பிளஸ், போட்டோஷாப் எல்லாம் தெரியும் சார்”

அவ்வளவுதானா என்பது போல ஒரு பார்வையை உமிழ்ந்தபடி நாசர் கேட்பார், “சி.டி. ரைட் பண்ண தெரியுமா?”

“தெரியும் சார். டி.வி.டி.கூட ரைட் பண்ணுவேன்”

“ஆஸம் ஆஸம். தம்பிக்கு கம்ப்யூட்டர்ல எல்லாமே தெரிஞ்சிருக்குடா” என்று உற்சாகமாகச் சொல்வார் நாசர்.

இவரைப் போன்ற பெரியவர்களும் கூட, இப்போது ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கிவிட்டார்கள். வாங்கிய கையோடு நம்மைப் போன்ற சொந்தக்கார, பக்கத்து வீட்டு இளைஞர்களைத் தான் தேடி வருவார்கள்.

“என்னப்பா இது? சின்ன சிம்கார்டு தான் போட முடியும்னு சொல்றான். மதுரையில் ஏர்செல்காரன் முதல் டவர் போட்டப்ப வாங்குன நம்பர் இது. வேற சிம்கார்டு போட்டா நம்பர் மாறிடாதா?” என்று ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும். போகப்போக, “தம்பி, பேஸ்புக் பேஸ்புக்குங்கிறாங்களே. அதுல ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணித் தாங்களேன்” என்று படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அதோடு நிற்காமல், “தம்பி வாட்ஸ் அப்புன்னு ரீசண்டா (?) ஒண்ணு வந்திருக்குல. அதையும் என் போன்ல போட்டுட்டேன். நம்ம குடும்பம்னு ஒரு குரூப் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அப்படியே உங்க நட்பு வட்டாரத்தில் என்னையும் சேர்த்துக்கோங்க. நானும் யூத் தாம்பா” என்று அடிமடியிலேயே கை வைப்பார்கள்.

இவர்களிடம் சிக்கிவிட்டோம் என்றால், ஒவ்வொரு அப்ளிகேஷனையும் நம் மீது தான் அப்ளை பண்ணுவார்கள். முதல் பேஸ்புக் ஸ்டேடஸில் ஆரம்பித்து, அரதப் பழசான வாட்ஸ் அப் மெசேஜ் வரைக்கும் போட்ட அடுத்தக் கணமே “எப்பூடி?” என்று நம்முடைய பாராட்டைக் கேட்டு வாங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இவர்களைக் கழற்றி விடுவதும், பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொள்வதும் எப்படி? இதோ சில ஐடியாக்கள்.

1. சாரி அங்கிள்; என்னோட போன்ல வைரஸ் இருக்குது. நான் உங்களை குரூப்ல சேர்த்தா உங்க போன் ரிப்பேர் ஆகிடும்.

2. என்னோடது சாம்சங் போன், உங்களோடது நோக்கியா. இந்த ரெண்டுக்கும் நடுவுல அப்படிச் செய்ய முடியாது அங்கிள்.

3. ஏர்செல்லுக்கும், ஏர்டெலுக்கும் இன்னும் அந்த அக்ரிமெண்ட் சைன் ஆகலை. அதனால் இப்போதைக்கு நாம ஒரே குரூப்ல சேர முடியாது.

4. என்னது வாட்ஸ் அப்பா? ஹைய்யோ ஹைய்யோ, என்ன மாமா உங்களுக்கு விஷயமே தெரியாதா? அந்த கம்பெனியைத் தான் பேஸ்புக்காரங்க விலைக்கு வாங்கிட்டாங்களே. இனிமேல், அது வேஸ்ட். பேசாமல் அதை அழிச்சிடுங்க.

5. கொஞ்சம் விவரமான ஆட்களாக இருந்தால், மேலே கண்ட ஐடியாக்கள் பலன் தராமல் போகலாம். எனவே, இதுபோன்ற பெரியவர்களை எல்லாம் ஒரு குரூப்பில் சேர்த்துவிட்டுவிடலாம். ஒருவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப் புகழ்வார். இன்னொருவர் இன்றைய ஆட்சியை விமர்சிப்பார். அப்புறம் என்ன அவங்களே அடிச்சி உருண்டு, வாட்ஸ் அப்பே வேணாம்னு ஓடிடுவாங்க. (நீ காதலிச்சா என்ன, நான் காதலிச்சா என்ன, எப்படியோ அந்தக் குடும்பம் நாசமாப் போகணும்னு வடிவேலு அண்ணேன் சொல்வாரே, அதே பார்முலா தான்)

6. இத்தனைக்குப் பிறகும், “தம்பி நான் அனுப்பின மெஸேஜை நீங்க படிச்சிட்டீங்க. அதான் டபுள் புளு டிக் வருதே. பிறகு ஏன் பதில் சொல்லலைன்னு வந்தால்? 16 எம்.பி.க்கு குறையாத எச்டி வீடியோக்கள் ஐந்தாறை வரிசையாக அனுப்பி அவர்களது ‘டேடா பேலன்ஸை’ பதம் பார்த்துவிடலாம். ஒரு மாதம் வரைக்கும் தொந்தரவு இருக்காது.

7. அதையும் மீறி நொச்சி, நொச்சின்னு வந்தாங்கன்னா இருக்கவே இருக்கு பிரைவஸி செட்டிங். அதில் போய் பிளாக் பண்ணிட வேண்டியது தான்.

இதெல்லாம் பெரியவர்களுக்கான ஆயுதங்கள். சின்னப் பசங்களை என்ன செய்யறது? டெக்னாலஜியில அவங்க நம்மைவிட ஸ்ட்ராங்க். என்ன லாக் போட்டாலும் ரிலீஸ் பண்ணிட்டு, புதுசு புதுசா கேம் இன்ஸ்டால் பண்ணி ஆட ஆரம்பிச்சிடுவாங்க. அது ப்ரீ கேமா இருந்தா பரவாயில்லை. காசு என்றால்?

ஸாரி ப்ரெண்ட்ஸ். சின்னப் பசங்களை ஏமாற்றவே முடியாது. நம் தோல்வியை ஒப்புக்கொண்டு, “தம்பி செல்லம், என்கிட்ட பேலன்ஸ் இருக்கிறதே நூற்றி சொச்சம் தான். ப்ளீஸ் விட்டுடுடா” என்று கெஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை. நம்மோட நேர்மையைப் பாராட்டி, “சரி பொழைச்சுப் போ” என்று விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x