Published : 27 Mar 2015 02:43 PM
Last Updated : 27 Mar 2015 02:43 PM
பொய்களுக்கு பாய் ஃப்ரெண்ட் - கேர்ள் ஃப்ரெண்ட் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. ஆனால், நிச்சயமாக பொய் சொல்லும் விஷயங்களில் வித்தியாசம் இருக்கிறது.
உங்கள் கேர்ள் ஃப்ரெண்ட் சொல்லும் பொய்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் அதிகமாகச் சொல்லும் பொய்கள் இவை...
“எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை”
இப்படி உங்கள் கேர்ள் ஃப்ரெண்ட் சொல்லும்போதே நீங்கள் உஷாராக வேண்டும். உதாரணத்துக்கு, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்வதைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்றால், அப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்றுதான் சொல்வார்கள்.
ஆனால், சென்றுவிட்டு வந்த பிறகு, “உனக்கு என்னைவிட உன் நண்பர்கள்தான் முக்கியமா” என்று கட்டாயம் சண்டைபோடுவார்கள். அதனால், உங்கள் கேர்ள் ஃப்ரெண்ட் உண்மையாகவே பிரச்சினை இல்லை என்று சொல்கிறாரா என்று உறுதிப்படுத்திக்கொள்வதில்தான் உங்கள் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.
“சத்தியமாக கோபப்பட மாட்டேன்”
ஆண்களிடம் இருந்து உண்மையை வரவழைப்பதற்காக, பெண்கள் அதிகமாக சொல்லும் பொய் இதுதான். ஏனென்றால், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் உண்மையைச் சொன்னாலும் பிரச்சினைதான். பொய் சொன்னாலும் பிரச்சினைதான். அதனால், இந்தக் கோபத்தைச் சமாளிப்பதைப் பற்றி மட்டும் யோசியுங்கள்.
“உன் பேஸ்புக் ஸ்டேட்டஸ் பற்றியெல்லாம் எனக்கு அக்கறையில்லை”
இப்படி உங்கள் கேர்ள் ஃப்ரெண்ட் சொன்னதுமே உங்களுடைய பேஸ்புக் ‘ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை’ ‘சிங்கிளில்’ இருந்து ‘கமிட்டட்’ ஆக மாற்றவேண்டியது அவசியம். இல்லையென்றால், உங்கள் ரிலேஷன்ஷிப்பேகூட கேள்விக்குள்ளாகலாம்.
“என்னுடைய ஒரு போட்டோகூட அவன் எஃப்.பி டைம்லைனில் இல்லை. நான் ரிலேஷன்ஷிப் ரிக்வஸ்ட் கொடுத்தும்கூட இன்னும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியென்றால், அவனுக்கு என்னைப் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை என்றுதான் ஆர்த்தம்”, இப்படிதான் கேர்ள் ஃப்ரெண்ட் உண்மையாக யோசித்துக்கொண்டிருப்பார். அதனால், நிஜத்தில் மட்டுமல்லாமல் பேஸ்புக்கிலும் உங்கள் கேர்ள் ஃப்ரெண்டை ஃபாலோ பண்ணுவது அவசியம்.
“ உன் சம்பளத்தைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை”
இதுவும் பொய்தான். பெண்கள் இப்படிச் சொன்னாலும் அது முழுவதும் உண்மையில்லை. உங்கள் கேர்ள் ஃப்ரெண்டுக்கு அடிக்கடி பரிசு கொடுப்பதற்கு நீங்கள் நல்ல சம்பளம் வாங்க வேண்டும். அதை அவர்கள் நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். நீங்கள் பரிசுகளே கொடுக்காவிட்டால், அவர்மீது அன்பே இல்லை என்றுகூட உங்கள் கேர்ள் ஃப்ரெண்ட் நினைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
“சரி, நான் உன்னை மன்னித்துவிடுகிறேன்”
இப்படி உங்கள் கேர்ள் ஃப்ரெண்ட் சொன்னால், அதை நம்பக் கூடாது. எப்போது வேண்டுமானாலும், அவர் மன்னித்துவிட்டதாகச் சொன்ன விஷயத்துக்காக மீண்டும் பெரிய எரிமலை வெடிக்கலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
“உன் நண்பர்கள் வந்தால் பிரச்சினையில்லை”
நண்பர்களுடன் தன் பாய் ஃப்ரெண்ட் அதிக நேரம் செலவிடுவதை எந்த கேர்ள் ஃப்ரெண்டும் விரும்ப மாட்டார். அதையும் அவர் இருக்கும்போது செய்தால் பிரச்சினை அதிகமாகத்தான் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT