Published : 12 Dec 2014 12:22 PM
Last Updated : 12 Dec 2014 12:22 PM
எஸ். ஷீரின் தாஜ், பி.டெக். முதலாம் ஆண்டு, எம்.ஐ.டி, குரோம்பேட்டை, சென்னை
பிடித்த புத்தகம்:
திருக்குர் ஆன். மனிதர்கள் ஒழுக்கத்தோடு கூடிய சிறப்பான வாழ்வை மேற்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் எனச் சொல்லித்தரும் அற்புதமான நூல். பாதித்த புத்தகமல்ல, போதித்த புத்தகம் என்றே சொல்ல வேண்டும்.
பிடித்த படம்:
மூன்றாம் பிறை. கேமரா கவிஞர் பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவான செலுலாய்ட் காவியம். கமலும், தேவியும் போட்டி போட்டு நடித்த விதம் இன்றும் கண்முன் நிற்கிறது.
பிடித்த இசை:
ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஆல்பங்கள் அனைத்தும் பிடிக்கும்.
பிடித்த இடம்:
திருச்சி அருகே உள்ள கல்லணைதான் எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்துக்கே மிகவும் பிடித்த இடம். கரிகாலன் கட்டிய அந்த அணை மிகவும் பழமையானது. கல்லணையின் பசுமையான சூழலில் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடும்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
கனவுப் பயணம்:
இயற்கை எழில் கொஞ்சும் அயர்லாந்து.
‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். வயது வரம்பு: 16 முதல் 30 வரை. முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT