Published : 05 Dec 2014 12:53 PM
Last Updated : 05 Dec 2014 12:53 PM
பிடித்த புத்தகம்:
ரோண்டா பைரன் எழுதிய சீக்ரெட் (Secret). நாம் யாராக இருந்தாலும் சரி, நமக்குள் இருக்கும் எண்ணங்களும், உணர்வுகளும்தான் நம்மை உருவாக்கும். வாழ்வின் மகிழ்ச்சிக்கும், வெற்றிக்கும் நாம்தான் பொறுப்பு என்பதை எளிமையாக எடுத்துரைக்கும் புத்தகம்.
பிடித்த படம்:
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து, தேசிய விருதுகளைப் பெற்ற ‘பசங்க’ திரைப்படம். என்னையும், எனது சிறு வயதையும் ஞாபகப்படுத்திய படம்.
பிடித்த இசை:
ஏ.ஆர். ரஹ்மான் இசை. எப்போதும் தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய இசை வடிவம் அவருடையது.
பிடித்த இடம்:
‘உதிரத்தின் உதவிகள்’ என்னும் தன்னார்வத் தொண்டு அமைப்பு. ஆதரவற்ற குழந்தைகளுக்காக நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அமைப்பை ஆரம்பித்தோம். இந்தக் குழுவோடு நான் இருக்கும் இடமும் நேரமும் எனக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
கனவுப் பயணம்:
டெல்லியில் உள்ள ‘குடியரசுத் தலைவர் மாளிகை’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT