Published : 07 Nov 2014 01:22 PM
Last Updated : 07 Nov 2014 01:22 PM
பறக்கும் கார்கள் வரிசையில், ஏரோமொபைல் 3.0 இப்போது புதிதாக அறிமுகமாக இருக்கிறது. ஆட்டோமொபைல், விமானம் என இரண்டிற்கும் ஏற்ற மாதிரி இது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு நொடியில் காரிலிருந்து விமானமாக மாறும்படி இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண காரை நிறுத்துவதற்கு என்ன இடம் தேவைப்படுமோ, அதே அளவு இடமே இந்தப் பறக்கும் காருக்குப் போதுமானது.
எல்லா கார்களைப் போலவே இதையும் டிராஃபிக்கில் ஓட்டிச் செல்லாம். எந்த விமானதளத்திலும் இதை விமானமாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேமாதிரி தரையிறங்குவதற்கு சில நூறு மீட்டர்கள் நீளம் கொண்ட ஒரு புல்பாதையோ நடைபாதையோ போதுமானது. ஏரோமொபைல் 3.0யின் மாதிரி வெர்ஷனான இது, இதற்கு முந்தைய மாதிரியான ஏரோ மொபைல் 2.5யை விட மேம்பட்டிருக்கிறது. இதில் இருவர் பயணிக்கலாம்.
ஏரோமொபைல் 3.0-ல் இன்னும் பல நவீனத் தொழில்நுட்பங்களையும் இணைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்குப் பல கோண இறக்கைகள் என்ற வசதி இதில் முக்கியமானதாகச் சொல்லப்படுகிறது. இந்த வசதி இருப்பதால் கரடுமுரடான நிலப்பரப்பிலும் ஏரோமொபைலைத் தரையிறக்கலாம். அக்டோபர் மாதத்தில் இருந்து இதன் சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதில் இணைக்கப்பட்டிருக்கும் ஏவியானிக்ஸ் கருவி, ஆட்டோ பைலட், பாராசூட் அமைப்பு ஆகியவை கூடுதல் சிறப்புகளாகக் கூறப்படுகிறது. ஜெர்மன் தயாரிப்பான இந்த ஏரோமொபைல் வியன்னாவின் ‘2014 பயோனீர்ஸ் விழா’வில் கலந்து கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT