Last Updated : 10 Jun, 2016 12:48 PM

 

Published : 10 Jun 2016 12:48 PM
Last Updated : 10 Jun 2016 12:48 PM

அழகில் கால் என்ன தலை என்ன?

ஃபேஷனான ஆடைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துத்தான் பெண்கள் காலணிகளையும் தேர்வுசெய்கிறார்கள். ஏதோ ஒரு கடைக்குச் சென்றோம், கண்ணில் பட்ட காலணியை எடுத்தோம், வந்தோம் என அவர்கள் வருவதில்லை.

நண்பர்கள் கூட்டத்துடன் சென்று விதவிதமான கடைகளில் ஏறி, இறங்கி, வராத நண்பர்களுக்கு சப்பலின் படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி அபிப்ராயம் கேட்டுப் பின்னரே அவர்கள் தங்களின் அழகுக் கால்களுக்கான காலணியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அதிலும் யாருமே அணிந்திராத சப்பல்கள் எங்கே கிடைக்கும் என்பதையும் அறிந்து அங்கே சென்று அதைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு ஒரு திருப்தி. ‘‘ஏய் எங்க வாங்குன? உனக்கு மட்டும் எப்படித்தான் டிசைன் டிசைனா சப்பல்ஸ் மாட்டுதோ” எனப் பிறரைச் சொல்லவைப்பதில் ஓர் ஆனந்தம்.

அதற்காகத்தான் அவ்வளவு அலைச்சல். அப்படித் தேர்ந்தெடுத்து, ஆண்களைத் தலை குனிய வைக்கிறார்கள். தலை குனிந்து பெண்களின் காலணிகளின் அழகை ரசிப்பதில் ஆண்களுக்கும் ஓர் ஆர்வம் பிறக்கிறது. அழகில் கால் என்ன, தலை என்ன?

இங்கே சில கண்கவர் காலணிகள் உங்களின் பார்வைக்கு:

1.இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் காலணி களை பார்ட்டிக்கு அணிந்து செல்லலாம். ஏதாவது சுற்றுலாத் தளத்தில் இயற்கையான காட்சி களைப் பார்க்கும்போது அவற்றைப் பார்ப்பதற்கு இவை உதவும். இவற்றின் உயரமே உங்களுக்குத் தனி அந்தஸ்தை வழங்கும்.

2. இது சம்மர் ஸ்டைல் சாண்டல் சப்பல். நல்ல வெயிலில் கடற்கரை மணல் போன்ற பகுதிகளில் நடந்து செல்லும்போது உங்கள் கால்களைப் பாதுகாப்பதில் இதன் பங்களிப்பு அலாதியானது. இதன் கிரியேடிவ் டிசைனான மேற்பட்டை உங்கள் கால்களின் மேலே கொடி போல் படர்வது தனி அழகு தரும்.

3.இது ப்ளாக் ஹீல் எனும் காலணி. ஆடம்பரமாகத் தோற்ற மளித்தாலும் எல்லோருடைய விருப்பத்துக்குரியது இது. ட்ரெண்டியான இந்த சப்பல்கள் அணிவதற்கு மிகவும் வசதியானவை. ஸ்டைலான தோற்றத்தை விரும்புவர்களுக்கு ஏற்றது.

4. ஏதாவது ஒரு வாகனத்தை ஓட்டிச் செல்வதற்கு ஏற்ற காலணிகள் இவை. விடுமுறை நாட்களின்போது எங்கே யாவது வாகனச் சவாரி செய்யும் தேவை ஏற்படும்போது இவை உங்களுக்குக் கைகொடுக்கும்.

5. இந்த உயரமான ஹீல்ஸ் சப்பலை நீங்கள் அணிய வேண்டுமானால் உங்களது ஆடையின் உயரம் குறைவாக இருக்க வேண்டும். இது கொஞ்சம் ஆபத்தானது என நினைக்கிறீர்களா? கல்லூரியில் ஏதாவது அழகிப் போட்டி நடந்தாலோ நண்பர்களுடன் பார்ட்டியில் நடனமாட நேர்ந்தாலோ அப்போது இது உங்களுக்குத் தேவைப்படலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x