Published : 21 Nov 2014 12:47 PM
Last Updated : 21 Nov 2014 12:47 PM
தாத்தா, பாட்டி ஒரே வீட்டில் இருந்தாலும் சரி, தொலை தூரத்தில் வேறு ஊர்களில் இருந்தாலும் சரி, அவர்கள் தங்களுடைய பேரன் பேத்திகளுடன் நேரம் செலவிடத் தவறுவதில்லை. தொலைபேசி வாயிலாகவோ வாய்ப்பு கிடைத்தால் நேரில் சென்றோ தங்கள் பேரன், பேத்திகளுடன் இருப்பதற்கு எப்போதும் தயாராக இருப்பார்கள். கல்லூரி, நண்பர்கள், ஹேங்க் அவுட்கள் என எப்போதும் பிஸியாக இருக்கும் இன்றைய இளைஞர்கள் தங்கள் தாத்தா, பாட்டியுடன் இருப்பதின் மதிப்பையும் உணர்ந்திருக்கிறார்கள். தங்கள் தாத்தா, பாட்டி மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றி இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
சுபிக்ஷா, இரண்டாம் ஆண்டு, பி.இ, கோவை
என்னுடைய பாட்டியின் பெயர் விஜயலக்ஷ்மி. நான் பாட்டிக்கு ரொம்ப செல்லம். தினமும் இரவு, உணவுக்குப் பிறகு பாட்டிக்கு மாத்திரை மருந்துகள் கரெக்டா எடுத்துத் தருவேன். அதைப் பார்த்து பாட்டி ரொம்ப மகிழ்ச்சி ஆவாங்க. பாட்டியுடன் வரலாறு, நாட்டு நடப்பு, அந்தக் கால கதைகள், ஜோக்குகள் எனக் கொஞ்ச நேரம் பேசிவிட்டுத்தான் தினமும் தூங்கச் செல்வேன். ஒரு நாளும் பாட்டியுடன் இருக்கும் நேரத்தை மிஸ் பண்ணுவதில்லை. இந்த வயசுலையும் பாட்டியின் படபட பேச்சு என்னை வியக்கவைக்கும். நான் சோர்ந்து இருக்கும்போது அவர்கள் தரும் ஆறுதல் வார்த்தைகள்தான் எனக்குத் தெம்பூட்டும்.
ஜனிதா, முதலாம் ஆண்டு, விஸ்காம், சென்னை
என்னுடைய தாத்தா பெயர் ஜோசப் செல்லதுரை, பாட்டியின் பெயர் ராஜம் செல்லதுரை. நான் முதல் பேரப்பிள்ளை என்பதால் வீட்டில் எனக்கு ரொம்ப செல்லம். தினமும் எனக்கு மூன்று வேளையும் பாட்டிதான் உணவு ஊட்டி விடுவார்கள். அப்போதுதான் நான் நிறைய சாப்பிடுவேன்னு பாட்டி சொல்வாங்க. நானும் பாட்டிக்கு ஊட்டி விடுவேன். வயதானதால், பாட்டியை பியூட்டி பார்லர் கூட்டிட்டு போக முடியாது. அதனால் மாதம் தவறாது அவங்களுக்கு நானே வீட்டில் ஹேர்-கட் பண்ணிவிடுவேன். நான் ஹே-கட் செய்தபிறகு ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்ணுவாங்க. ஊருக்குப் போனால்கூடத் தினமும் அவங்களுக்கு போன் பண்ணிடுவேன். நான் மறந்தாலும் பாட்டி போன் செய்ய மறக்க மாட்டாங்க.
அஸ்வின், முதலாம் ஆண்டு, விஸ்காம், சென்னை
என்னுடைய பாட்டியின் பெயர் பரமேஸ்வரி. தினமும் எனக்குப் பிடித்த உணவு சமைப்பதும், அம்மா என்னைத் திட்டும்போது எனக்கு சப்போர்ட் பண்ணுவது எனப் பாட்டி என் மேலே ரொம்ப பாசமா இருப்பாங்க. எப்போதும் என்னைப் பற்றியே யோசிச்சுட்டு இருப்பாங்க. நான் கல்லூரியில் இருந்து வீடு திரும்பியதும் பாட்டிகூட வாக்கிங் போவேன். தினமும் அவங்க பிஸியோதெராபி செய்ய க்ளினிக் செல்வதால் நானும் போயிட்டு வருவேன். அவங்களுக்குச் சின்ன சின்ன உதவிகள் செய்வேன். அவங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். நான் உற்சாகமாக இருக்கும்போது பாட்டி கூடதான் செல்ஃபி எடுத்துப்பேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT