Published : 01 Mar 2014 12:37 PM
Last Updated : 01 Mar 2014 12:37 PM
அன்னாசிப்பழம் ‘பூந்தாழப் பழம்’ என்ற தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் அனாஸ் சாட்டிவிஷ் ஸ்கல்ட் (Annas Sativis Schult).
l அன்னாசிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்துக்களைக் கொண்ட அன்னாச்சிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
l அன்னாசிப்பழச் சாற்றுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்ற நோய்கள் குணமடையும்.
l நிற்காமல் தொடரும் விக்கல் நிற்க, ஒரு பாலாடை அளவு சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்தலாம். மலச்சிக்கல் தீர, இதில் இரண்டு மடங்கு சாற்றை அருந்த குணம் பெறலாம்.
l மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசிப் பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு பழச்சாறு சிறந்த டானிக். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
l தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். பித்தத்தைக் குறைக்கும் தன்மை உடையது.
l இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாசிப் பழத்தை நாமும் சாப்பிட்டு பயன டையலாம்.
கிரிஜா நந்தகோபால், திருச்சி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT