Published : 24 Mar 2017 10:32 AM
Last Updated : 24 Mar 2017 10:32 AM
அமெரிக்க ஒளிப்படக் கலைஞர் தாமஸ் ஆர். ஷிஃப் எடுத்த ஒளிப்படங்கள்தான் இவை. அமெரிக்காவில் உள்ள பல்வேறு நூலகங்களை தாமஸ் ஆர். ஷிஃப் ஒளிப்படம் எடுத்திருக்கிறார். இந்த ஒளிப்படங்களெல்லாம் ஆல்பெர்ட்டோ மேங்குவெல் என்பவரின் ‘தி லைப்ரரி புக்’ என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ‘பேனரமிக் கேமரா’வைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் இவை.
லிங்கன் பொது நூலகம், இல்லினாய்ஸ்
பருவ இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்குமான ஹெர்ப் கான் மையம், சான் ஃபிரான்ஸிஸ்கோ பொதுநூலகம்.
அமெரிக்கக் கலாச்சாரத்தில் நூலகங்கள் மிக முக்கியமான பங்குவகிக்கின்றன. அமெரிக்காவின் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ உலகில் மிகப் பெரிய நூலகம். உலக அறிவின் மிகச் சிறந்த பங்களிப்புகள் இங்கே இடம்பெற்று ஒவ்வொரு அமெரிக்கரும் அதை அடைய வேண்டும் என்ற இலக்கில் 216 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதைப் போல அமெரிக்க நூலகங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. நூல்களின் சேகரங்கள் மட்டுமல்ல நூலகக் கட்டிடங்களும் மிகவும் தனித்துவமானவை. தாமஸ் ஆர். ஷிஃப் எடுத்த ஒளிப்படங்களில் அமெரிக்க நூலகங்கள் ஆலீஸின் அற்புத உலகம் போல் மிளிர்கின்றன.
ஐயோவா சட்ட நூலகம், த மைய்ன்
பென்சில்வேனியா நூலகத்தின் வரலாற்று மையம், ஃபிலடெல்ஃபியா.
நன்றி: தி கார்டியன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT