Published : 08 Jul 2016 12:59 PM
Last Updated : 08 Jul 2016 12:59 PM
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் காலையில் உணவு தயாரிப்பது ஒரு போரான வேலை என அலுத்துக்கொள்ளும் நபரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.
காலை நேர உணவு தயாரிப்பதற்கான ஓர் இயந்திரத்தை இங்கிலாந்தில் பீட்டர் ப்ரௌன் என்னும் மெக்கானிகல் இன்ஜினீயரும், மெர்வின் ஹக்கெட் என்னும் விமான ஓட்டியும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இருவருமே ஓய்வுபெற்றவர்கள். எனவே சுவாரசியமான ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருந்திருக்கிறார்கள். எனவே இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி, முட்டை உணவு, ப்ரெட் டோஸ்ட், டீ, காபி போன்ற உணவு வகைகளைத் தயாரித்துக்கொள்ளலாம். இந்த இயந்திரத்தை மூன்று மாத காலங்களில் சுமார் 1,000 மணி நேரத்தைச் செலவழித்து உருவாக்கியிருக்கிறார்கள். காலையில் எழுந்து சமையல் வேலை பார்க்க விரும்பாத தனி ஆள்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுவிட்சை ஆன் செய்து விட்டு காலைக்கடன்களை முடித்துவிட்டு வருவதற்கு முன்னர் காலை நேர உணவு தயாராகிவிடும். வந்த உடன் சுடச்சுடச் சாப்பிட்டுக்கொள்ளலாம். இந்த இயந்திரத்தின் வீடியோவைக் காண: >https://www.youtube.com/watch?v=WRkJn5N77jM
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT